DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
22. மனித இதயத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
79%
23. மனித மூளையில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
75%
24. மனித கல்லீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
68%
25. மனித தோலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
64%
26. மனித இரத்தத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
83%
27. மனித எலும்புகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
22%
28. மனித தசைகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
75%
29. மனித நுரையீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
80%
30. மனித மூட்டுகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
83%
31. மனித நிணநீரில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
94%
32. மனித சிறுநீரகங்களில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
83%
33. இயற்கையில் நீரானது எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
மூன்று: திண்மம்,நீர்,வாயு
34. புவியின் மொத்த பரப்பில் நான்கில் எத்தனை பங்கு நீர் சூழ்ந்துள்ளது?
மூன்று பங்கு
35. எத்தனை சதவீத நீரானது பெருங்கடல்களிலும்,கடல்களிலும் காணப்படுகிறது?
97%
36. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் துருவப் பனிப்படிவுகள் ,பனியாறுகள் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
68.7%
37. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் நிலத்தடிநீர் எத்தனை சதவீதத்திற்கு
பரவியுள்ளது?
30.1%
38. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் மற்ற நீர் ஆதாரங்கள் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
0.9%
39. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் மேற்பரப்பு நீர் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
0.3%
40. மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் ஏரிகள் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
87%
41. மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் ஆறுகள் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
2%
42. மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் சதுப்புநில நீர் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
11%
43. அதிக அளவு கரை பொருள் கரைந்துள்ள நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உப்புநீர்
44. நீர் என்பது__?
ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருள்
45. நீரின் மூலக்கூறு வாய்பாடு?
H2O
46. நீரின் எந்த பண்பு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது?
புற இயைபு
47. நீரில் கலந்துள்ள உப்பின் அளவை பொருத்து நீரானது எவ்வாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
மூன்று: நன்னீர் ,உவர்நீர் மற்றும் கடல்நீர்
48. நன்னீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு என்ன?
குறைந்தபட்சம் 0.05% தொடங்கி அதிகபட்சம் 1% சதவீதம்
49. உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் வரை உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்?
3%
50. எத்தனை சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் கடல் நீரில் உப்பு கரைந்திருக்கும்?
3 சதவீதத்திற்கும் மேல்
51. கடல் நீரில் கரைந்துள்ள உப்புகள் என்னென்ன?
சோடியம் குளோரைட் ,மெக்னீஷியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு
52. உலக நீர் தினம் எப்போது?
மார்ச் 22
53. நீரானது ஆவியாகி பின்பு மழையாகப் பொழியும் ஒரு தொடர் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்சுழற்சி
54. நீர் சுழற்சி எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது ?
மூன்று
55. நீர் சுழற்சியின் நிலைகள் என்னென்ன?
ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல்
56. நீர் சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹைடிராலிஜிக்கல் சுழற்சி
57. தாவரங்கள் இலை துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நீராவிப்போக்கு
58. எத்தனை வகையான இயற்கை நன்னீர் ஆதாரங்கள் புவியில் காணப்படுகின்றன?
மூன்று
59. புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீர் எவ்வாறு அழைக்கப்படும்?
மேற்பரப்பு நீர்
60. மேற்பரப்பு நீரின் ஆதாரங்கள் என்னென்ன ?
ஆறு, ஏரி, நன்னீர் ,சதுப்பு நில நீர்
61. பூமியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் உறைந்த நிலையில் காணப்படுகிறது ?
68.7%
62. மண்ணில் செறிந்திருக்கும் நீர் எவ்வாறு அழைக்கப்படும்?
நிலத்தடி நீர்
63. ஆசியாவின் முக்கிய ஆறுகளில் எத்தனை ஆறுகள் இமயமலையிலிருந்து தொடங்கி பாய்கின்றன ?
10 ஆறுகள்
64. காலன் என்பது எதனை அளவிடக்கூடிய அலகு?
நீர்
65. ஒரு காலன் என்பது எத்தனை லிட்டர்?
3.785 லிட்டர்
66. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
TMC/Feet
67. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
கன அடி/ விநாடி
68. நீரை பாதுகாப்பதற்கான முதன்மையான இரு வழிமுறைகள்?
நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு
69. நீர்நிலைகள் கடலை சந்திக்கும் ஈரநிலங்கள் என்ன பெயர்?
முகத்துவாரம்
70. மனித உடல் செயல்பாட்டில் நீரின் பங்கு என்ன?
உடல் இயக்க செயல்பாடுகளை நிகழ்த்த, உடல் வெப்பநிலையை சீராக பாதுகாக்க ,உடலில் உள்ள உறுப்புகள் திசுக்கள் மற்றும் செல்கள் நன்கு செயல்படும்
71. நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் நீர் தேவைப்படுகிறது?
இரண்டு முதல் மூன்று லிட்டர்
72. ஈரப்பதம் நிறைந்த காடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
சதுப்பு நிலங்கள்
73. தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் என்னென்ன?
சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் ,முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள், சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ,காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சதுப்புநிலம்
74. லவாய்சியரின் காலம் என்ன?
1743- 1794
75. லவாய்சியர் எந்த கல்லூரியில் வேதியியல் தாவரவியல் வானவியல் மற்றும் கணிதம் பயின்றார்?
மாசாரின் கல்லூரி
76. எந்த ஆண்டு லவாய்சியர் மேரி அன்னே என்பவரை மணந்துகொண்டார்?
1771
77. தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக அமைந்த புத்தகமான Elements of chemistry என்னும் புத்தகத்தை லவாய்சியர் எந்த ஆண்டு வெளியிட்டார்?
1789
78. நவீன வேதியல் புரட்சியை ஏற்படுத்தியவர் எனப் போற்றப்படுபவர்
யார் ?
லவாய்சியர்