NEW 6th TERM 3 SCIENCE | PLANTS IN DAILY LIFE ONELINERS | அன்றாட வாழ்வில் தாவரங்கள் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


 

79.   மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன?

பொருளாதார தாவரவியல்

80.  தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?

நான்கு: உணவுத் தாவரங்கள் ,நறுமணப் பொருள் தரும் தாவரங்கள், மருத்துவ தாவரங்கள், நார்த்தரும் தாவரங்கள்

81.    உணவு தரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உணவுத் தாவரங்கள்

82.   உணவுத் தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

மூன்று: காய்கறிகள் ,தானியங்கள், பருப்பு வகைகள்

83.   தாவரத்தின் வேர்களில் இருந்து கிடைக்கும் காய்கறிகள்?

பீட்ரூட் கேரட்

84.    தாவரத்தின் இலைகளில் இருந்து கிடைக்கும் உணவு? 

கீரைகள், முட்டைக்கோஸ் ,கருவேப்பிலை

85.   தாவரங்களின் தண்டிலிருந்து கிடைக்கும் உணவு?

கரும்பு ,உருளைக்கிழங்கு ,கருணைக்கிழங்கு

86.   தாவரத்தின் மலர்களில் இருந்து கிடைக்கும் உணவு வகைகள் ?

வாழைப்பூ, காலிஃப்ளவர்

87.   தாவரங்களின் கனிகளிலிருந்து கிடைக்கும் உணவு?

நெல்லி ,கொய்யா மற்றும் இதர கனிகள்

88.    தானியங்கள் என்பவை எந்த வகை தாவரங்களில் விளைவிக்கப்படும் உணவுப் பொருளாகும்?

புல் வகை தாவரங்கள்

89.   அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் உள்ள உண்ணக்கூடிய விதைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

பருப்புகள்

90.  பருப்புகள் எதனுள் வளர்கின்றன ?

கனி உறை

91.   உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? 

இரண்டாமிடம்

92.   உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

அக்டோபர் 16

93.   தாவரங்களில் நமது நோய்களை குணப்படுத்த பயன்படும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

மருத்துவ தாவரங்கள்

94.   நெல்லி தாவரத்தின்   பயன்படும் பாகம் எது ?

கனி

95.    நெல்லிக்கனிய் மருத்துவ பயன்கள் என்ன?

வைட்டமின் சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் ,மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும்

96.   துளசி தாவரத்தின் பயன்படும் பாகம் ?

இலை மற்றும் விதை

97.    துளசி தாவரத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

இருமல் ,சளி, மார்புச்சளி மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை குணப்படுத்தும்

98.    சோற்றுக்கற்றாழையின் எந்த பாகம்  மருந்தாக பயன்படுகிறது?

இலைகள்

99.   சோற்றுக் கற்றாழையின் மருத்துவ பயன் என்ன ?

மலமிளக்கியாக ,காயத்தை குணப்படுத்த, தோல் எரிச்சலையும், குடல் புண்ணையும் குணப்படுத்த

100.  வேம்பு தாவரத்தின் மருந்தாக பயன்படும் பாகம் எது?

மரப்பட்டை இலை மற்றும் விதைகள்

101.  வேம்பு தாவரத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

கிருமிநாசினியாக தோல் நோய்களுக்கு மருந்தாக

102.   மஞ்சள் தாவரத்தின் எந்த பகுதி மருந்தாக பயன்படுகிறது?

தரைக்கீழ் தண்டு

103.    மஞ்சளின் மருத்துவ பயன் என்னென்ன?

கிருமிநாசினியாகவும் சிறிய காயம் பட்ட இடங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும்

104.  எந்த தவறுகளிலிருந்து நமக்கு தேவையான நார்கள் பெறப்படுகின்றனவோ அந்த தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

நார்தரும் தாவரங்கள்

105.   நார்த் தரும் தாவரங்களிலிருந்து பெறப்படும் நார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

இயற்கை நார்கள்

106.   நார்த் தரும் தாவரங்கள் பயன்பாட்டின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

மூன்று நெசவு நார்கள், கயிறு நார்கள்& நிரப்பும் நார்கள்

107.     நார்த் தாவரங்கள் கிடைக்கப்பெறும் தாவரப் பாகங்களின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

நான்கு : விதைகளின் மேற்புறத் தூவி நார்கள், தண்டு அல்லது தண்டிழை நார்கள், இலை நார்கள், உரிமட்டை நார்கள்

108.  விதைகளின் மேற்புறத்தூவி நார்களுக்கு எடுத்துக்காட்டு?

பருத்தி

109.  தண்டு அல்லது தண்டிலை நார்களுக்கு எடுத்துக்காட்டு?

ஆளி,சணல்

110.  இலை நார்களுக்கு எடுத்துக்காட்டு ?

கற்றாழை

111.  உரிமட்டை நார்களுக்கு எடுத்துக்காட்டு?

தேங்காய்

112.  நூல் இலைகளிலிருந்து நூலை உருவாக்கும் முறைக்கு என்ன
பெயர் ?

நூல் நூற்றல்

113.  இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது?

ஏழு

114.   இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது?

மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ,ஒரிசா ,பீகார், உத்தரப் பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா

115.   எந்த மாநிலம் இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது?

மேற்குவங்காளம்

116.   வணிக ரீதியாக பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அதன் அடரத்தியின் அடிப்படையில் என்னவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள்

117.  நிலவாழ் பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம் எனும் மிகப்பெரிய பிரிவினைச் சார்ந்த தாவரங்களிலிருந்து எந்த வகை மரக்கட்டைகள் பெறப்படுகின்றன?

வன்கட்டைகள்

118.  வன்கட்டைகளுக்கு எடுத்துக்காட்டு?

தேக்கு ,பலா

119.   பூக்கா தாவரங்களான ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில்
இருந்து பெறப்படும் கட்டைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

மென் கட்டைகள்

120.    மரக் கட்டைகளில் இருந்து மெல்லியதாக சீவி எடுக்கப்படுகின்ற மர தகடுகளை உரிய வகையில் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி ஒட்டி உருவாக்கப்படுவதற்கு என்ன பெயர்?

ஒட்டுப்பலகை

121.   அழகியல் காரணங்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன?

அலங்கார தாவரங்கள்

122.   பட்டுப்புழுக்கள் எந்த இலையை உணவாக எடுத்துக் கொள்கின்றன?

மல்பெரி இலை

123.   எது வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது?

நீலப்பச்சைப்பாசி & பாக்டீரியா சூடோமோனாஸ்

124.    CDRI ன் விரிவாக்கம் என்ன?

Central drug research institute

125.   Central drug research institute எங்கு உள்ளது?

லக்னோவ்

126.   மூட்டு முடக்குவாதத்திற்கு எதிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் நானோ உருவாக்கத்தின் மூலம் மருந்தினை உருவாக்கியுள்ளனர்?

பாலக்கீரை

127.  எந்த எண்ணெய் பூசப்பட்ட யூரியா நைட்ரஜனை மெதுவாக வெளியிடுகிறது ?

வேப்பெண்ணெய்

128.   வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியாவினை எந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்? 

இந்தியா

 

Tags :
You cannot copy content of this page