NEW 6th TERM 3 SCIENCE| MAGNETISM ONELINERS | காந்தவியல் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


1.      காந்தத் தன்மை உள்ள பாறைகள் மேக்னட் என்றும் மேக்னடைட் என்றும் அழைக்கப்பட்ட காரணம் என்ன ?

சிறுவன் மேக்னஸின் பெயரால்  மற்றும் இப்பாறையில் கண்டறியப்பட்ட மெக்னீசியா என்ற ஊரின் பெயராலும்.

2.      காந்தத் தன்மையுடைய தாது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

மேக்னடைட்

3.      மேக்னடைட் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 இயற்கை காந்தம்

4.     காந்தங்கள் திசையினை அறிய பயன்படுவதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?

வழி காட்டும் கற்கள்

5.      மனிதனால் தயாரிக்கப்பட்ட காந்தங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

செயற்கை காந்தங்கள்

6.     காந்தத்தால் ஈர்க்கப்படும் கூடிய பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

காந்தத் தன்மை உள்ள பொருள்கள்

7.      இரும்பு கோபால்ட் நிக்கல் போன்றவை எதற்கு  எடுத்துக்காட்டு?

காந்தத் தன்மை உள்ள பொருள்கள்

8.     காந்தத்தால் ஈர்க்கப்படாதப் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?

காந்தத் தன்மையற்ற பொருள்கள்

9.     காந்தத்தின் ஈர்ப்பு விசை காந்தத்தின் இருமுனைகளிலும் அதிகமாக இருக்கிறது இந்த இரு முனைகளும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

காந்தத்தின் துருவங்கள்

10.   தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும்  எந்த திசையில் ஓய்வுக்கு வரும்?

வடக்கு-தெற்கு

11.    800 ஆண்டுகளுக்கு முன்பு யார் காந்தக்கற்களைக் கொண்டு திசைகாட்டும் கருவிகளைப் பயன்படுத்தினார்?

சீனர்கள்

12.    திசையை அறிய உதவும் ஒரு காந்த ஊசி பெட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

காந்த திசை காட்டும் கருவி

13.    காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் என்ன பண்பை பெற்றுள்ளன?

ஒன்றையொன்று ஈர்க்கும் பண்பு

14.   காந்தங்களின் ஒத்த துருவங்கள் என்ன பண்பை பெற்றுள்ளன?

ஒன்றையொன்று விலக்கும் பண்பு

15.    காந்தங்களை எந்த பொருட்களுக்கு அருகில் வைத்தால் காந்தங்கள் அதன் தன்மையை இழந்துவிடும்?

கைபேசி, குறுந்தகடு, கணினி

16.   சட்ட காந்தங்கள் காந்தத் தன்மை இழந்து விடாமல் பாதுகாக்க எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்?

காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பதுபோல இணையாக வைத்து அவற்றுக்கு இடையில் ஒரு மரக்கட்டையை வைக்கவேண்டும்

17.     குதிரைலாட வடிவம் காந்தத்தின் காந்தத் தன்மை இழந்து விடாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?

காந்தத்தின் இரு முனைகளுக்கு குறுக்கே ஒரு தேனிரும்புத் துண்டை வைக்க வேண்டும்

18.    Maglev Train என்பதில் Maglev என்பதன் விரிவாக்கம் என்ன?

Magnetic levitation

19.   எந்த மூன்று நாடுகள் மின்காந்த தொடர்வண்டிகளை பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றன?

சீனா ,ஜப்பான் ,தென் கொரியா

20.   உலகத்திலேயே எந்த நாட்டில் அதிவேக மின்காந்த தொடர்வண்டி உள்ளது?

ஜப்பான்

21.    மின்காந்த தொடர் வண்டிகள் தண்டவாளத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் அந்தரத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன?

10 சென்டிமீட்டர்

 

Tags :
You cannot copy content of this page