NEW 6th TERM 2 SOCIAL | RESOURCES ONELINERS | வளங்கள் | ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


 

347.  எந்த இயற்கை வளத்தில் இருந்து சிலிக்கான் என்ற தனிமம் பிரித்தெடுக்கப்படுகிறது ?

 மணல்

348.  உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்

349.  மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்த ஒரு பொருளும் எவ்வாறு அழைக்கப்படும்?

 வளம்

350.  ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் என்னென்ன?

காலமும் தொழில்நுட்பமும்

351.  வளங்கள் எத்தனை வகைப்படும்?

மூன்று: இயற்கை வளங்கள் ,மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் மனித வளங்கள்

352.  இயற்கையில் இருந்து நேரடியாக பெறப்படும் அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும் ?

 இயற்கை வளங்கள்

353.  இயற்கை வளங்கள் தோற்றத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?

 உயிரியல் வளங்கள்(biotic resources) மற்றும் உயிரற்ற வளங்கள்(abiotic resources)

354.  தோற்றத்தின் அடிப்படையில் உயிருள்ள அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும்?

 உயிரியல் வளங்கள்

355.  உயிர் இல்லாத அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும் ?

உயிரற்ற வளங்கள்

356.   வளர்ச்சி நிலையின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

 கண்டறியப்பட்ட வளங்கள்(actual resources) மற்றும் மறைந்திருக்கும் வளங்கள்(potential resources)

357.  தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கும் வளங்கள் எவ்வாறு அறியப்படுகிறது?

கண்டறியப்பட்ட வளங்கள்

358.    தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் இருக்கும் வளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மறைந்திருக்கும் வளங்கள்

359.  நிலப்பரப்பில் உள்ள ஈஸ்ட்டை விட மிகுந்த ஆற்றல் உடையது எது ?

கடல் ஈஸ்ட்

360.  ஈஸ்ட் எதில் பயன்படுகிறது?

ரொட்டி தயாரித்தல், மது வடித்தல் ,திராட்சை ரசம் தயாரித்தல் ,உயிரி எத்தனால், தயாரித்தல் மற்றும் மருத்துவப் புரதம் தயாரித்தல்

361.   புதுப்பித்தலின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

 புதுப்பிக்கக்கூடிய வளங்கள் மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள்

362.   ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள், பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

புதுப்பிக்கக்கூடிய வளங்கள்

363.    குறிப்பிட்ட அளவில் உள்ள அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும்?

 புதுப்பிக்க இயலாத வளங்கள்

364.  வளங்கள் அதன் பரவலின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

உள்ளூர் வளங்கள் மற்றும் உலகளாவிய வளங்கள்

365.  ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உள்ளூர் வளங்கள்

366.  உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உலகளாவிய வளங்கள்

367.    உரிமையின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

தனிநபர் வளங்கள் ,சமூக வளங்கள், நாட்டு வளங்கள் மற்றும் பன்னாட்டு வளங்கள்

368. தனிநபருக்கு மட்டும் சொந்தமான வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

தனிநபர் வளங்கள்

369.  ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வளத்தினை பயன்படுத்திக் கொள்வர் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

சமூக வளங்கள்

370. ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நாட்டு வளங்கள்

371.  உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படுவது எது?

வெப்ப மண்டல மழை காடுகள்

372.   வெப்ப மண்டல மழை காடுகள் பகுதியில் காணப்படும் தாவரங்களில் எத்தனை சதவீதம் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள்?

25%

373.   எந்த ஒரு நாட்டின் எல்லைக்கு உட்படாத  மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 பன்னாட்டு வளங்கள்

374.  எந்த வகை திமிங்கலத்திலிருந்து திமிங்கல புனுகு பெறப்படுகிறது?

ஸ்பெர்ம் திமிங்கிலம்

375.  ஒரு பவுண்டு (0.454 கி.கி)திமிங்கல புனுகின் விலை எவ்வளவு மதிப்புடையது?

 63,000 அமெரிக்க டாலர்

376.  இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்று உருவாக்கம் செய்யப்பட்டு புதிய பொருள்களாக கிடக்கின்றன.இவ்வாறு பெறப்பட்ட வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்

377.   மூலப் பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டு பொருள்களாக மாற்றும் செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படும்?

இரண்டாம் நிலை செயல்பாடுகள்

378.  இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மனிதவளம்

379.   முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மூன்றாம் நிலை செயல்பாடுகள்

380.  “வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று அவனது தேவைக்காக மட்டுமே” எனக் கூறியவர் யார்?

மகாத்மா காந்தி

381.    “உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம்” எனக் கூறுபவர் யார் ?

மகாத்மா காந்தி

382.  வளங்களை சரியாக பயன்படுத்தும் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வளதிட்டமிடுதல் அல்லது வள மேலாண்மை

383.   வளத்தினை கவனமாக கையாளுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வளங்களை பாதுகாத்தல்

384. நிகழ்கால தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலைமுறையினர்க்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து சமநிலை தன்மையோடு ஏற்படும் வளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

நிலையான வளர்ச்சி

385.   வளங்களை பாதுகாக்க வேண்டும் எனில் எத்தனை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் ?

மூன்று (3RS): குறைத்தல்(Reduce), மறுபயன்பாடு(Reuse), மறுசுழற்சி செய்தல்(Recycle)

 

Tags :
You cannot copy content of this page