DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
- “கணா” என்னும் சொல் யாரை குறிக்கும்?
சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களை
- சங்கா என்றால் பொருள் என்ன ?
மன்றம்
- சங்கங்கள் யாரால் ஆளப்பட்டது ?
சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களை கொண்ட குழு
- ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதற்கு பெயரென்ன?
முடியாட்சி அரசு
- கிமு ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எத்தனை வகைப்பட்ட அரசுகள் செயல்பட்டது?
இரண்டு: கண-சங்கங்கள், முடியாட்சி அரசுகள்
- முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி எவ்வாறு அழைக்கப்பட்டது?
கண- சங்கங்கள்
- மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
ஜனபதங்கள்
- கிமு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கை சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?
16
- 16 மகாஜனபதங்கள் என்னென்ன?
அங்கம் ,மகதம்,வஜ்ஜி,,காசி ,மல்லம், குரு ,கோசலம், அவந்தி, சேதி, வத்சம், பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம்,அஸமகம், காந்தகாரம் மற்றும் காம்போஜம்
- நான்கு முக்கிய மகாஜனபதங்கள் என்னென்ன ?
மகதம்- பீகார் ,அவந்தி- உஜ்ஜைனி, கோசலம்- கிழக்கு உத்தரப் பிரதேசம், வத்சம்-கோசாம்பி அலகாபாத்
- நான்கு முக்கிய மகாஜனபதங்களில் முக்கியமான பேரரசாக உருவானது எது?
மதம்
- மகதம் எங்கு அமைந்திருந்தது ?
கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதி
- பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள் என்னென்ன?
நான்கு ஹரியங்கா வம்சம், சீசுநாக வம்சம், நந்த வம்சம், மௌரியவம்சம்
- பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
ஹரியங்கா வம்சம்
- பிம்பிசாரர் திருமண உறவு ,படையெடுப்பு ஆகிய வழிகளில் எந்த பகுதிகளில் தமது அரசை விரிவுபடுத்தினார்?
லிச்சாவ,மதுரா மற்றும் கோசலா
- அஜாதசத்ரு யாருடைய சமகாலத்தவர்?
புத்தர்
- ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டை கூட்டியவர் யார் ?
பிம்பிசாரர் மகன் அஜாதசத்ரு
- பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்காண அடித்தளமிட்டவர் யார்?
அஜாதசத்ருவினுடைய மகன் உதயன்
- ஹரியங்கா அரச வம்சத்தை தொடர்ந்து எந்த அரச வம்சத்தினர் ஆட்சி பொறுப்பேற்றனர்?
சிசுநாக அரச வம்சம்
- எந்த அரசர் தலைநகரை ராஜ கிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்க்கு மாற்றினார்?
காலசோகா
- இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலியில் கூட்டியவர் யார்?
காலசோகா
- இந்தியாவில் முதன் முதலாக பேரரசை உருவாக்கியவர்கள் யார்?
நந்தர்கள்
- முதல் நந்த வம்ச அரசர் யார் ?
மகாபத்ம நந்தர்
- மகாபத்ம நந்தரை தொடர்ந்து அவருடைய எட்டு மகன்களும் ஆட்சி செய்தனர் அவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
நவநந்தர்கள்
- நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ?
தனந்தனந்தர்
- தனந்தனந்தர் யாரால் வெற்றி கொள்ளப்பட்டார்?
சந்திரகுப்த மௌரியர்
- பண்டைய மகத நாட்டில் இருந்த புகழ் பெற்ற மடாலயம் எது?
நாளந்தா
- நாளந்தா பல்கலைக்கழகம் யாருடைய காலத்தில் மிகப் புகழ்பெற்ற கல்வி மையமாக திகழ்ந்தது?
குப்தர்கள்
- நாளந்தா என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
சமஸ்கிருத சொல்: நா+அலம் +தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பு இதன்பொருள் “வற்றாத அறிவை அளிப்பவர்”
- அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
கௌடில்யர்
- முத்ரராட்சஸம் என்ற நூலை எழுதியவர் யார்?
விசாகதத்தர்
- யாருடைய அகநானூற்றுப் பாடல் மௌரிய பேரரசு பற்றி குறிப்பிடுகிறது?
மாமூலனார்
- எந்த வெளிநாட்டு சான்றுகள் மௌரிய அரசை பற்றி குறிப்பிடுகிறது?
தீபவம்சம் ,மகாவம்சம், இண்டிகா
- மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரிய அரசவையில் யாருடைய தூதுவராக இருந்தவர் ?
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டர்
- மெகஸ்தனிஸ் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார் ?
14 ஆண்டுகள்
- மெகஸ்தனிஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?
இண்டிகா
- மௌரிய பேரரசின் தலைநகரம் எது ?
பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா)
- மௌரிய பேரரசின் வரலாற்றுக்காலம் என்ன ?
கிமு 322 முதல் 187 வரை
- மௌரிய பேரரசின் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு எத்தனை நுழைவாயில்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன ?
64 நுழைவுவாயில்கள் மற்றும் 570 கண்காணிப்பு கோபுரங்கள்
- இந்தியாவின் முதல் பெரிய பேரரசு எது?
மௌரிய பேரரசு
- மௌரியப் பேரரசை நிறுவியவர் யார் ?
சந்திரகுப்த மவுரியர்
- எந்த சமணத்துறவி சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார் ?
பத்திரபாகு
- சந்திரகுப்தர் எங்கு சமண சடங்கான சல்லேகனா செய்து உயிர் துறந்தார் ?
சரவணபெலகுலா, கர்நாடகா
- சல்லேகனா என்ற சமண சடங்கு முறை என்பது என்ன?
உண்ணாநோன்பிருந்து உயிர் துறத்தல்
- சந்திரகுப்த மௌரியரின் மகன் யார்?
பிந்துசாரர்
- பிந்துசாரரின் இயற்பெயர் என்ன ?
சிம்மஹசேனா
- கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர் ?
அமிர்தகதா
- அமிர்தகதா என்பதன் பொருள் என்ன?
எதிரிகளை அழிப்பவன்
- பிந்துசாரர் தனது மகன் அசோகரை எந்தப் பகுதியின் ஆளுநராக நியமித்தார்?
உஜ்ஜயினி
- மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?
அசோகர்
- அசோகர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார்?
தேவனாம்பிரியர்
- தேவனாம்பிரியர் என்பதன் பொருள் என்ன?
கடவுளுக்கு பிரியமானவன்
- அசோகர் எப்போது கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார் ?
கி.மு 261
- கலிங்கப் போரின் பயங்கரத்தை பற்றி அசோகர் தன்னுடைய எத்தனையாவது பாறை கல்வெட்டில் விவரித்துள்ளார்?
13 வது பாறை கல்வெட்டு
- “அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார்” என கூறியவர் யார் ?
வரலாற்றறிஞர் HG.வெல்ஸ்
- கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் எந்த மதத்தை தழுவினார்?
பௌத்தம்
- தர்மத்தின் கொள்கையை மக்களுக்கு பரப்புவதற்காக அசோகர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தர்ம யாத்திரைகள்
- அசோகரின் எந்த தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது ?
இரண்டாம் தூண் கல்வெட்டு
- எங்கு அமைந்துள்ள அசோகருடைய தூணின் சிகர பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும் வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசிய கொடியின் மையச் சக்கரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ?
சாரநாத்
- அசோகர் யாரை பௌத்தத்தை பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்?
மகன் மஹிந்தா ,மகள் சங்கமித்ரா
- தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் நியமித்த புதிய அதிகாரிகள் யார் ?
தர்ம-மகாமாத்திரர்கள்
- அசோகர் மூன்றாம் பௌத்த மாநாட்டை எங்கு கூட்டினார் ?
தனது தலைநகரமான பாடலிபுத்திரம்
- பேரரசர் அசோகருடைய ஆணைகள் மொத்தம் எத்தனை ?
33
- அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் எவ்வாறு அழைக்கப்படும் ?
பேராணை
- சாஞ்சி அசோகர் கல்வெட்டுகளில் என்ன எழுத்துமுறை காணப்படுகிறது?
பிராமி
- அசோகரின் காந்தகார் கல்வெட்டுகளில் என்ன எழுத்துமுறை காணப்படுகிறது ?
கிரேக்கம் மற்றும் அராமிக்
- வடமேற்கு பகுதியில் உள்ள அசோகரின்கல்வெட்டுகளில் என்ன எழுத்துமுறை காணப்படுகிறது?
கரோஷ்டி
- அசோகருடைய எந்தக் கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரள புத்திரர் ஆகியோரையும் சத்தியபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன?
2 மற்றும் 13ஆம் பாறை கல்வெட்டுகள்
- மௌரிய பேரரசின் என்ன அமைச்சரவை அரசருக்கு உதவியது?
மந்திரிபரிஷத்
- மந்திரிபரிஷத் என்ற அமைச்சரவை யாரை உள்ளடக்கியது?
ஒரு புரோகிதர் ,ஒரு சேனாபதி, ஒரு மகா மந்திரி மற்றும் இளவரசன்
- எங்கு உள்ள அசோகரது கல்வெட்டு பாலி மற்றும் பாகா எனும் இரண்டு வரிகளை குறிப்பிடுகின்றது?
லும்பினி
- மொத்த விளைச்சலில் எத்தனை பங்கு நில வரியாக வசூல் செய்யப்பட்டது?
⅙ பங்கு
- மௌரியர் காலத்தில் நீதித் துறையின் தலைவர் யார் ?
அரசர்
- படைகளின் தலைமைத் தளபதி யார் ?
அரசர்
- 30 நபர்கள் கொண்ட குழு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு குழுவும் எவற்றை நிர்வாகம் செய்தது?
கடற்படை ,ஆயுதங்கள் (போக்குவரத்து மற்றும் விநியோகம்), காலாட்படை, குதிரைப்படை ,தேர்ப்படை, யானைப்படை
- நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக எத்தனை உறுப்பினர்களை கொண்ட குழுவானது ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
30 நபர்கள் (5,5 உறுப்பினர்களாக)
- நகர நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?
நகரிகா
- ‘நகரிகா’விற்கு எந்த அதிகாரிகள் உதவி செய்தனர்?
ஸ்தானிகா,கோபா
- எந்தக் கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவுசெய்துள்ளது?
ருத்ரதாமனின் ஜூனாகத் /கிர்னார் கல்வெட்டு
- சுதர்சனா ஏரி பணிகள் யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டு யாருடைய காலத்தில் நிறைவு பெற்றது ?
சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டு அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன
- மௌரிய அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தை என்னவாக வழங்கியது?
பணம்
- வெள்ளி நாணயங்களில் என்ன வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன?
மயில் ,மலை மற்றும் பிறை சந்திர வடிவம்
- மௌரிய பேரரசின் செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மாஸாகாஸ்
- காசி,வங்கா,காமரூபா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை ஆகிய இடங்களில் சிறப்புமிக்க துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்று கூறும் நூல் எது?
அர்த்தசாஸ்திரம்
- மௌரியர் கால கலைகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு :உள்ளூர் கலை &அரச கலை
- யக்க்ஷன்,யக்க்ஷி உருவ சிலைகள் எந்த கலைப்பிரிவை சார்ந்தவை?
உள்ளூர் கலைகள்
- அரண்மனைகள் மற்றும் பொதுக் கட்டடங்கள், ஒற்றைக் கல் தூண்கள், பாறைக் குடைவரை கட்டடக்கலை, ஸ்தூபிகள் ஆகியவை எந்த பிரிவை சார்ந்தவை?
அரசகலைகள்
- நீர்,வளம், மரங்கள், காடுகள் ,காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் யார்?
யக்க்ஷன்
- யக்க்ஷாவின் பெண் வடிவத்தின் பெயர்?
யக்க்ஷி
- செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக் கோள வடிவம் உடைய குவிமாடம் போன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்தூபி
- புத்தரின் உடலுறுப்புகளின் எச்சங்கள் எதன் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்?
ஸ்தூபி
- எங்குள்ள தூணின் சிகரப் பகுதியில் தர்மசக்கரம் இடம்பெற்றுள்ளது?
சாரநாத்தில் உள்ள ஒற்றைக் கல் தூண்
- எங்கு உள்ள மூன்று குகைகளில் அசோகர் உடைய அர்பணிப்பு கல்வெட்டுகள் உள்ளன?
பராபர் குன்றுகள்
- எங்கு உள்ள மூன்று குகைகளில் தசரத மௌரியரின் (அசோகரின் பெயரன்) கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன?
நாகார்ஜுன கொண்டா
- எந்த நாட்டைச் சேர்ந்தவர்களின் படையெடுப்பு மௌரியப் பேரரசை வலிமை குன்ற செய்தது ?
பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு
- மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?
பிரகத்ரதா
- பிரகத்ரதா யாரால் கொல்லப்பட்டார்?
அவருடைய படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர்
- சுங்க வம்சத்தை நிறுவியவர் யார் ?
புஷ்யமித்ர சுங்கர்
- ராஜகிரகத்தின் தற்போதைய பெயர் என்ன?
ராஜ்கிர்
- பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் என்ன ?
பாட்னா
- கலிங்கத்தின் தற்போதைய பெயர் என்ன?
ஒடிசா
- சீனப்பெருஞ்சுவர் எந்த அரசால் கட்டப்பட்டது?
குன்-சி ஹங்க் (கி.மு 1ஆம் நூற்றாண்டு)
- கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒலிம்பியா வின் ஜியஸ் கோயில் எங்கு உள்ளது?
கிரீஸ் நாடு