NEW 6th TERM 2 SOCIAL | GREAT PHILOSOPHERS AND NEW BELEIF ONELINERS | மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


 

181.   பண்டைய இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கும் காலகட்டம்
எது ?

கிமு ஆறாம் நூற்றாண்டு

182.  கிமு ஆறாம் நூற்றாண்டை ‘நட்சத்திரங்களின் மழை’ என வருபவர் யார் ?

 வரலாற்றறிஞர் வில் டூராண்ட்

183.  24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்ட சமயம் எது ?

சமணம்

184.   முதல் தீர்த்தங்கரர் யார் ?

ரிஷபர்

185.   கடைசி தீர்த்தங்கரர் யார்?

மகாவீரர்

186.  மகாவீரரின் இயற்பெயர் என்ன ?

வர்த்தமானர்

187.   மகாவீரர் எங்கு பிறந்தார் ?

வைஷாலிக்கு அருகேயுள்ள குந்தக் கிராமம், பீகார்

188.   மகாவீரரின் பெற்றோர் யார் ?

சித்தார்த்தர் -திரிசலா

189.   மகாவீரர் எங்கு இறந்தார்?

பவபுரி-பீகார்

190. சமணம் என்னும் சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?

ஜினா என்ற சமஸ்கிருதச் சொல் (அதன்பொருள் தன்னையும் ,வெளியுலகத்தையும் வெல்வது)

191.   வர்த்தமானர் என்பதன் பொருள் என்ன?

செழிப்பு

192.  மகாவீரர் தனது எத்தனையாவது வயதில் துறவறம் மேற்கொண்டார்?

முப்பதாவது வயது

193.   மகாவீரர் எத்தனை ஆண்டு கால தவத்திற்கு பின்னர் அவர் எல்லையற்ற அறிவை அடைந்தார் ?

பன்னிரண்டரை ஆண்டுகள்

194.   வர்த்தமானர் கடுமையான தவத்திற்கு பின்னர் பெற்ற எல்லையற்ற அறிவு நிலைக்கு பெயர் என்ன ?

கைவல்ய

195.   மகாவீரர் கைவல்ய நிலையை அடைந்த பின்னர் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

ஜினா (jina)

196.  மகாவீரரை பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? 

சமணர்கள் (Jains)

197.  மகாவீரர் எந்த மரபுகளை மறு ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்?

பண்டைய சிரமானிய (sramanic) மரபுகள்

198.  யார் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர்கள் என நம்பப்படுகிறது?

 மகாவீரர்

199.   அகிம்சை அல்லது அறவழி  எந்த சமயத்தின் அடிப்படை தத்துவம் ?

 சமணம்

200.  கர்மாவில் இருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் எத்தனை வழிகளை அறிவுறுத்தினார்?

 மூன்று வழிகள்: நன்னம்பிக்கை ,நல்லறிவு, நற்செயல்

201.    பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மோட்சம்

202.   சமணத்தின் ஐந்து நடத்தை விதிகள் என்னென்ன?

அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது , சத்யா-உண்மையை மட்டும் பேசுதல் ,அஸ்தேய-திருடாமை, அபரிகிரகா- பணம் ,பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது, ,பிரம்மச்சரியா- திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது

203. மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர் யார்?

மகாவீரரின் தலைமை சீடரான கௌதமசுவாமி

204. மகாவீரரின் போதனைகள் தொகுக்கப்பட்ட பின்
அவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

ஆகம சித்தாந்தம்

205. சமணம் எத்தனை பிரிவுகளாகப்  பிரிந்தது? 

திகம்பரர்கள்,சுவேதாம்பரர்கள்

206. வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள் சமணத்தின் எந்த  பிரிவை சார்ந்தவர்கள் ?

திகம்பரர்கள்

207.  எந்தப் பிரிவைச் சேர்ந்த சமணத்துறவிகள் ஆடைகள் அணிவதில்லை?

திகம்பரர்கள்

208.  பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ, நிர்வாண நிலையை அடையவோ முடியாது என எந்த சமணப் பிரிவை சார்ந்தவர்கள் நம்பினர்?

திகம்பரர்கள்

209.  சமணத்தின் எந்த பிரிவை சார்ந்தவர்கள் முற்போக்கானவர்களாக கருதப்படுகிறார்கள்? 

ஸ்வேதாம்பரர்கள்

210.  சமணத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர்?

சுவேதாம்பரர்கள்

211.  சுவேதாம்பரர்கள் என்ன உடமைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்?

 ரஜோகரனா (கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம் ) பிச்சை பாத்திரம், புத்தகம்

212.   தமிழகத்தில் எங்கு சமணர்மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது ?

 மதுரை நகர் ,கீழக்குயில்குடி கிராமம்

213.   பாண்டவர் படுக்கை என அழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?

மதுரை அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் உள்ள கலிஞ்சமலை

214.   அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூலில் குறிப்பு உள்ளது?

 மணிமேகலை

215.  கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு செல்லும் வழியில் சமணர் பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக எந்த தமிழ் காப்பியம் குறிப்பிடுகிறது?

சிலப்பதிகாரம்

216.   எந்த இடங்களில் சமண மடாலயங்கள் இருந்துள்ளன ?

புகார் ,உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்), காஞ்சிபுரம்

217.  காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமம் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?

ஜைனக்காஞ்சி

218.  பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?

 புத்தர்

219.  கௌதம புத்தரின் இயற்பெயர் என்ன?

சித்தார்த்தர்

220. சித்தார்த்தர் எங்கு பிறந்தார் ?

லும்பினி தோட்டம் நேபாளம்

221.  சித்தார்த்தரின் பெற்றோர் யார் ?

சுத்தோதன -மாயாதேவி

222.  சித்தார்த்தர் எங்கு இறந்தார் ?

குசி நகரம், உத்தர பிரதேசம்

223.  புத்தர் என்பதன் பொருள் என்ன ?

ஞானம் பெற்ற ஒருவர்

224.   புத்தர் எந்த வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம்
பூண்டார் ?

29 வயது

225.  புத்தர் எத்தனை ஆண்டுகள் தவமிருந்தார்?

 ஆறு ஆண்டுகள்

226.  புத்தர் எங்கு ஞானம் பெற்றார்?

 கயாவுக்கு அருகே ஒரு  அரசமரத்தடியில்

227.   புத்தர் எத்தனை நாள் தியானத்தில் இருந்தபோது ஞானம் பெற்றார்? 

49ம் நாள்

228.  புத்தர் சாக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்த துறவி என்பதால் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

சாக்கியமுனி

229.  புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை எங்கு நிகழ்த்தினார் ?

வாரணாசி அருகே உள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள மான் பூங்கா

230. புத்தரின் முதல் போதனை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தர்மசக்ர பரிவர்த்தனா அல்லது தர்ம சக்கரத்தை நகர்த்துதல்

231.  புத்தரின் நான்கு பேருண்மைகள் என்னென்ன?

வாழ்க்கை துன்பங்கள் துயரங்கள் நிறைந்தது ,ஆசையே துன்பங்களுக்குக் காரணம் ,ஆசையை துறந்து விட்டால் துன்ப துயரங்களை போக்கிவிடலாம், சரியான பாதையை பின்பற்றினால் ஆசைகளை வென்றுவிடலாம்

232.   புத்தரின் எண்வகை வழிகள் என்னென்ன?

 நல்ல நம்பிக்கை ,நல்ல எண்ணம், நல்ல பேச்சு ,நல்ல செயல், நல்ல வாழ்க்கை ,நல்ல முயற்சி, நல்ல அறிவு, நல்ல தியானம்

233.   புத்தரின் போதனைகள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது?

தம்மா

234.  புத்தரின் சங்கத்தில் உறுப்பினராக இருந்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

 பிட்சுக்கள்

235.  ஒரு பௌத்த கோவில் அல்லது தியான கூடம் எவ்வாறு அழைக்கப்படும்?

 சைத்தியம்

236.  மடாலயங்கள் /துறவிகள் வாழும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?

 விகாரைகள்

237.   புத்தருடைய உடலுறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஸ்தூபி

238.  பௌத்தம் எத்தனை பிரிவுகளாக பிரிந்தது?

இரண்டு: ஹீனயானம் ,மகாயானம்

239.   புத்தரின் சிலைகளையோ ,உருவப் படங்களையோ வணங்காதப் பிரிவு எந்த பிரிவு ?

ஹீனயானம்

240.  புத்தரின் உருவங்களை வணங்கும் பிரிவு எது ?

மகாயானம்

241.     பௌத்தத்தில் பிராகிருத மொழியைப் பயன்படுத்திய பிரிவு எது?

ஹீனயானம்

242.  மகாயானம் என்ன மொழியை பயன்படுத்தியது?

சமஸ்கிருதம்

243.   ஹீனயானம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தேரவாதம்

244. பௌத்தத்திற்கு ஆதரவு தந்த அரசர்கள் யார்?

அசோகர் ,கனிஷ்கர் ,ஹர்ஷர்

245.    பௌத்த விகாரைகள் அல்லது மடாலயங்கள் என்ன மையங்களாக செயல்பட்டன?

கல்வி மையங்கள்

246.  யுவான்சுவாங் பல ஆண்டுகள் எந்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி கல்வி பயின்றார்?

 நாளந்தா

247.  அஜந்தா குகைகள் எங்கு உள்ளது?

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்

248.  முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது ?

ராஜகிருகம்

249. இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?

வைசாலி

250. மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது ?

பாடலிபுத்திரம்

251.  நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?

காஷ்மீர்

252.  மணிமேகலை எந்த இலக்கிய நூல்?

பௌத்த இலக்கியம்

253.  மணிமேகலையில் எந்த இடம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது?

காஞ்சிபுரம்

254.  பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞரான தர்மபாலர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?

காஞ்சிபுரம்

255.   எந்த நூற்றாண்டில் யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார் ?

கிபி ஏழாம் நூற்றாண்டில்

256.   காஞ்சிபுரத்தில் யாரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்?

அசோகர்

 

 

Tags :
You cannot copy content of this page