DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
51. முதன்முதலில் செல் என்ற சொல்லினை பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கியவர் யார்?
ராபர்ட் ஹூக்
52. ராபர்ட் ஹூக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இங்கிலாந்து
53. மைக்ரோகிராபியா எனும் நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்?
1665
54. செல் என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
லத்தீன்
55. செல்லுலா என்னும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் என்ன?
சிறிய அறை
56. செல்லை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன ?
செல் உயிரியல்
57. செல் எத்தனை முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது?
மூன்று
58. செல்லின் முக்கிய பகுதிகள் என்னென்ன?
செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு,திரவநிலை சைட்டோபிளாசம்,உட்கரு
59. செல்லின் பல்வேறு பணிகளைச் செய்வதற்காக செல்லினுள் பல உறுப்புகள் காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படும் ?
செல் நுண்ணுறுப்புகள்
60. ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
மைக்ரோ மீட்டர்
61. பாக்டீரியாக்கள் எந்த அளவில் காணப்படுகின்றன?
0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர்
62. ஒரு செல்லால் ஆன நெருப்புக் கோழியின் முட்டையின் விட்டம் எவ்வளவு?
170 மில்லிமீட்டர்
63. நமது உடலில் மிக நீளமான செல்லாக கருதப்படுவது எது?
நரம்பு செல்
64. பாக்டீரியா ,அமீபா ,கிளாமிடோமோனஸ் மற்றும் ஈஸ்ட்ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
ஒருசெல் உயிரினம்
65. ஸ்பைரோகைரா எதற்கு எடுத்துக்காட்டு?
பல செல் உயிரினம்
66. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3.7×10^13 (or) 37000000000000
67. பொதுவாக செல்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது?
இரண்டு: புரோகேரியாட்டிக் மற்றும் யூகேரியாட்டிக் செல்கள்
68. தெளிவான உட்கருவினை கொண்டிருக்காத செல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
புரோகேரியாட்டிக் செல்
69. புரோகேரியாட்டிக் செல்களின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
நியூக்ளியாய்டு
70. இப்புவியில் முதன் முதலில் உருவான செல் எது?
புரோகேரியாட்டிக் செல்
71. புரோகேரியாட்டிக் செல்லின் அளவு என்ன?
0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் வரை
72. தெளிவான உட்கருவை கொண்டுள்ள செல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
யூகேரியாட்டிக் செல்கள்
73. எந்த செல்கள் ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவையாக உள்ளன?
புரோகேரியாடிக் செல்
74. எந்த செல்கள் பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவையாக உள்ளன?
யூகேரியாட்டிக் செல்
75. எந்த செல் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை?
புரோகேரியாடிக் செல்
76. எந்த செல் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகிறது?
யூகேரியாடிக் செல்
77. எந்த செல்களில் நியுக்ளியோலஸ் காணப்படுவதில்லை?
புரோகேரியாடிக் செல்
78. எந்த செல்களில் நியுக்ளியோலஸ் காணப்படும்?
யூகேரியாட்டிக் செல்
79. தாவரங்கள் மற்றும் விலங்குகள் செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
யூகேரியாட்டிக் செல்கள்
80. எந்த செல்களில் சென்டிரியோல் காணப்படுவதில்லை?
தாவர செல்கள்
81. விலங்கு செல்கள் எப்போதும் எந்த வடிவில் இருக்கும்?
கோள வடிவம்
82. செல்லை பாதுகாத்து செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையை தருவது ஆகிய முக்கிய பணிகளை மேற்கொள்ளும் செல்லின் பாகம் எது?
செல்சுவர்
83. செல்சுவரின் சிறப்பு பெயர் என்ன?
தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர்
84. செல் இருக்கு பாதுகாப்பு தருவது செல்லின் போக்குவரத்திற்கு உதவுவது எது ?
செல் சவ்வு
85. செல் சவ்வின் சிறப்பு பெயர் என்ன?
செல்லின் கதவு
86. நீர் அல்லது ஜெல்லி போன்ற செல்லில் உள்ள நகரும் பொருள் எது?
சைட்டோபிளாசம்
87. சைட்டோபிளாசமனத்தின் சிறப்பு பெயர் என்ன ?
செல்லின் நகரும் பகுதி
88. செல்லிற்கு தேவையான அதிக சக்தியை உருவாக்கி தருவது எது?
மைட்டோகாண்ட்ரியா
89. மைட்டோகாண்ட்ரியா எவ்வாறு அழைக்கப்படும்?
செல்லின் ஆற்றல் மையம்
90. பசுங்கணிகம் எவ்வாறு அழைக்கப்படும்?
செல்லின் உணவு தொழிற்சாலை
91. செல்லின் மூளையாக செயல்படுவது எது?
உட்கரு
92. உட்கருவின் சிறப்பு பெயர் என்ன?
செல்லின் கட்டுப்பாட்டு மையம்
93. நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புவது
எது?
உட்கரு உறை
94. உட்கரு உறையின் வேறு பெயர்?
உட்கரு வாயில் (அ) உட்கரு கதவு