NEW 6th TERM 2 SCIENCE| HUMAN ORGAN SYSTEMS ONELINERS | மனித உறுப்பு மண்டலங்கள் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


124. அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்து உறுப்புகளின் கூட்டமைப்பால் உருவானது எது?

உறுப்பு மண்டலம்

125.   உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட பணியை செய்தல்____ எனப்படும்.

உறுப்பு மண்டலம்

126.  நமது உடலில் எத்தனை உறுப்பு மண்டலங்கள் உள்ளன?

எட்டு

127.  நமதுஉடலிலுள்ள உறுப்பு மண்டலங்கள் என்னென்ன ?

எலும்பு மண்டலம் ,தசை மண்டலம் ,செரிமான மண்டலம் ,சுவாச மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம் ,நரம்பு மண்டலம் ,நாளமில்லா சுரப்பி மண்டலம் ,கழிவு நீக்க மண்டலம்

128.  மனிதனின் எலும்பு மண்டலம் எத்தனை எலும்புகளை உடையது?

206

129.  எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

இரண்டு பிரிவுகள்: அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம்

130. மனித உடலின் செங்குத்தான அச்சை  உருவாக்குவது எது?

அச்சு சட்டகம்

131.   அச்சுச்சட்டகமானது என அழைக்கப்படுபவை எவை?

மண்டையோடு ,முதுகெலும்புத் தொடர், விலா எலும்புக் கூடு

132.   மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது எது? 

இணையுறுப்புச் சட்டகம்

133.   வாய்க்குழியின் அடித்தளத்தில் காணப்படும் எழும்பு எது?

ஹயாய்டு எலும்பு

134.  நமது முகத்திலேயே  எந்த எலும்பு மிகப்பெரியது மட்டும் உறுதியானது?

கீழ்த்தாடை எலும்பு

135.   விலா எலும்பு கூடு எத்தனை இணைகள் கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளை கொண்டுள்ளது?

பன்னிரண்டு இணைகள்

136.  மனிதனின் கை கால் எலும்புகள் எத்தனை இணைகளைக் கொண்டவை?

இரண்டு: முன்னங்கை & பின்னங்கால்

137.   நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச் சிறியது எது?

உள் காதிலுள்ள அங்கவடி (stapes)

138.  அங்கவடி (stapes) நீளம் என்ன?

2.8 மில்லி மீட்டர்

139. நமது உடலில் உள்ள நீளமான எலும்பு?

தொடை எலும்பு

140.  மனிதனின் எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?

206

141.   உடலில் எத்தனை வகை தசைகள் உள்ளன?

மூன்று: எலும்புத் தசைகள், மென் தசைகள், இதயத் தசைகள்

142.  நம் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் தசைகள் எவ்வாறு அழைக்கப்படும்? 

இயக்கு தசைகள்

143.  உணவுக் குழாய் ,சிறுநீர்ப்பை ,தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசைகள் எது?

மென் தசைகள்

144.  மென் தசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

கட்டுப்படாத இயங்கு தசைகள்

145.  இதய தசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

விருப்பத்திற்கு ஏற்ப கட்டுப்படாத இயங்கு தசைகள்

146.  உணவுக்குழாய் எவ்வளவு நீளம் உடைய தசையால் ஆன நீண்ட குழல் ஆகும்?

9 மீட்டர்

147. செரிமான சுரப்பிகள் என அழைக்கப்படுபவை?

உமிழ்நீர் சுரப்பிகள், இரைப்பை சுரப்பிகள், கல்லீரல், கணையம், குடல் சுரப்பிகள்

148.   உமிழ்நீரில் ஸ்டார்ச்சினை சிதைக்கக்கூடிய எந்த நொதி அமைந்துள்ளது?

அமைலேஸ்

149.  சிறுகுடல் எத்தனை மீட்டர் நீளமுடையது?

6 மீட்டர்

150.   சுவாச பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கும் அமைப்பு எது?

குரல்வளைமூடி (எப்பிகிளாட்டிஸ்)

151.  நுரையீரலைச் சுற்றி இரு அடுக்குகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புப் படலம் காணப்படுகிறது. அதற்கு என்ன
பெயர்?

ப்ளூரா

152.   நாசித் துவாரங்களின் வழியாக காற்றில் உள்ள ஆக்சிஜன் உள்ளிழுக்கப்பட்டு நுரையீரல்களில் உள்ள கார்பன்டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?

வெளிசுவாசம்

153.   ரத்த ஓட்ட மண்டலம் வழியாக ஆக்சிஜன் உடல் முழுவதும் அழிக்கப்பட்டு அங்குள்ள கார்பன்-டை-ஆக்சைடு எடுத்துச் செல்லப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?

உட்சுவாசம்

154.  செல்கள் வழியாக ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.இதற்கு என்ன பெயர்?

செல்சுவாசம்

155.  எந்த வாயு சுண்ணாம்பு நீரைப் பாலாக மாற்றும் தன்மையுடையது?

கரியமிலவாயு

156. மனிதனின்  ஒவ்வொரு நுரையீரலிலும் ஏறக்கூடிய எத்தனை மில்லியன் நுண் காற்றுப் பைகள் உள்ளன?

300 மில்லியன்

157.   நமது உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவு சத்துப்பொருட்கள், ஹார்மோன்கள் ,கழிவு ப்பொருள்கள் போன்றவற்றை கடத்துகிறது?

ரத்த ஓட்ட மண்டலம்

158.  இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?

நான்கு அறைகள்

159.  இதயம் இரு சுவர்களைக் கொண்ட எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது?

 பெரிகார்டியம்

160.  நமது உடலில் எத்தனை வகையான ரத்தக்குழாய்கள் உள்ளன?

மூன்று

161.   மூன்று வகையான ரத்தக் குழாய்கள் என்னென்ன?

தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள்

162.  இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்?

மூன்று வகைப்படும்

163.  ரத்த அணுக்களின் வகைகள் என்னென்ன ?

இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், இரத்தத் தட்டுகள்

164. இரத்த சிவப்பு அணுக்கள் எங்கு உருவாக்கப்படுகின்றன ?

எலும்பு மஜ்ஜை

165.  நாடித்துடிப்பு எதனால் ஏற்படுகிறது?

தமனியில் செல்லும் ரத்த ஓட்டத்தினால்

166. ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு?

72 முதல் 80 வரை

167.   வலது வென்டிரிக்கிளிலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்வது எது?

நுரையீரல் தமனி

168.  நுரையீரலில் இருந்து இரத்தத்தை இடது ஏட்ரியத்திற்கு எடுத்துச் செல்வது எது?

நுரையீரல் சிரை

169.  இதயத்திலிருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் குருதியை எடுத்து செல்ல பயன்படுவது எது ?

தமனிகள்

170.  தமனிகள் எந்த நிறத்தில் காணப்படுகின்றன ?

வெளிர் சிவப்பு

171.    உடலின் பிற பகுதிகளில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு வருவது எது?

சிரைகள்

172.   சிரைகள் என்ன நிறத்தில் காணப்படுகின்றன?

கருஞ்சிவப்பு

173.    மூளையை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?

மூன்று

174.  மூளையின் பிரிவுகள் என்னென்ன?

முன் மூளை ,நடுமூளை மற்றும் பின் மூளை

175.    உடலின் மத்திய கட்டுப்பாட்டு மையம் என அழைக்கப்படுவது எது ?

மூளை

176.  மூளையில் ஒருவர் தனது வாழ்நாளில் சேமித்து வைக்கக் கூடிய தகவல்கள் எவ்வளவாக கூறப்படுகிறது?

100 மில்லியனுக்கும் மேல்

177.   கண் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?

மூன்று:கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி

178.   சுவையானது எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது ?

மூன்று: புறச்செவி, நடுச்செவி
உட்செவி

179.  மனித உடலின் மிகப்பெரிய உணர் உறுப்பு எது?

தோல்

180.  நாளமில்லா சுரப்பி மண்டலம் உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

ஹார்மோன்கள்

181.   பிட்யூட்டரி சுரப்பியின் இருப்பிடம் எது?

மூளையின் அடிப்பகுதி

182.   பீனியல் சுரப்பியின் இருப்பிடம் எது?

மூளையின் அடிப்பகுதி

183.  தைராய்டு சுரப்பியின் இருப்பிடம் எது ?

கழுத்து

184.   தைமஸ் சுரப்பியின் இருப்பிடம் எது?

மார்புக்கூடு

185.  கணையத்தின் இருப்பிடம் எது?

வயிற்றின் அடிப்பகுதி

186.  அட்ரினல் சுரப்பியின் இருப்பிடம் எது?

சிறுநீரகத்திற்கு மேல்

187.  இனப்பெருக்க உறுப்புகளின் இடம் இருப்பிடம் எது?

இடுப்புக்குழி

188.  சிறுநீரகங்கள் என்ன வடிவத்தில் உள்ளன?

அவரை விதை வடிவம்

189.  சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு எது?

நெஃப்ரான்கள்

190.  நமது உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

70%

191.   நமது மூளையில் உள்ள சாம்பல் நிறப்பகுதியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

85%

192.  கொழுப்பு செல்களில் எத்தனை சதவீதம் நீர்  உள்ளது?

15%

193.  நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்துகிறோம்?

1.5 முதல் 3.5 லிட்டர் வரை

 

 

 

Tags :
You cannot copy content of this page