DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
231. மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக பாயும் பொழுது என்ன ஆற்றல் உருவாகிறது?
வெப்ப ஆற்றல்
232. ஒரு பொருளின் வெப்பநிலையை உயரச் செய்து மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்க கூடிய ஒரு வகையான ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பம்
233. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பம்
234. வெப்பத்தின் SI அலகு என்ன?
ஜூல்
235. வெப்பத்தை அளக்க பயன்படும் வேறு அலகு எது?
கலோரி
236. வெப்ப நிலையை துல்லியமாக கணக்கிட உதவும் கருவி எது?
வெப்பநிலைமானி
237. ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவுக்கு என்ன பெயர்?
வெப்பநிலை
238. வெப்பநிலையின் SI அலகு என்ன?
கெல்வின்
239. வெப்பநிலையின் வேறு அலகுகள் என்ன?
செல்சியஸ் ,ஃபாரன்ஹீட்
240. செல்சியஸ் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சென்டிகிரேட்
241. வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருள்கள் ஒன்றை ஒன்று தொடும் பொழுது வெப்பமானது எந்த திசையில் பாய்கிறது என்பதை அவற்றின் எது நிர்ணயிக்கிறது?
வெப்பநிலை
242. சாதாரணமாக அறை வெப்ப நிலையில் உள்ள நீரின் வெப்ப நிலை எந்த அளவில் இருக்கும்?
30°C
243. எந்த வருடம் ஆபிரிக்காவில் உள்ள லிபியாவில் காற்றின் வெப்பநிலையானது 59 டிகிரி செல்சியஸ் என கணிக்கப்பட்டிருந்தது?
1922
244.எந்த கண்டத்தின் வெப்பநிலை உலகிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக அளவிடப்பட்டுள்ளது?
அண்டார்டிகா
245. தோராயமாக அண்டார்டிகாவின் வெப்பநிலை எவ்வளவு?
-89°C
246. நமது உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
37°C
247. ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொறுத்தது எது ?
வெப்பநிலை
248. எது வெப்பநிலையை மட்டுமல்லாமல்,ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும்
பொறுத்தது?
வெப்பம்
249. மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு எது?
வெப்பநிலை
250.ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலை குறிப்பிடும் ஓர் அளவீடு?
வெப்பம்
251. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தப்பயன்படும் வெப்ப அளவு என்ன?
ஒரு கலோரி
252. ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அவை இரண்டும் என்ன தொடர்பில் உள்ளன?
வெப்ப தொடர்பு
253. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
வெப்பச் சமநிலை
254. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப விரிவடைதல்
255. வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
நீள்விரிவு
256. வெப்பத்தினால் பொருளின் பருமனில் ஏற்படும் அதிகரிப்பு
எவ்வாறு அழைக்கப்படும் ?
பருமவிரிவு
257. வெப்பத்தினால் மூலக்கூறுகளின் அதிர்வு அல்லது இயக்கம் அதிகரிப்பதால் அவற்றிற்கிடையே என்ன அதிகரிக்கிறது ?
இடைவெளி
258. சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருட்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன ?
போரோசிலிகேட் கண்ணாடி
259. போரோசிலிகேட் கண்ணாடியின் வேறு பெயர் என்ன?
பைரக்ஸ் கண்ணாடி
260. வெப்பம் அதிகமாக உள்ள பொழுது உலோகங்கள் என்னவாகும்?
விரிவடையும்