NEW 6th TERM 2 SCIENCE| ELECTRICITY ONELINERS | மின்னியல் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


194. மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

மின் மூலங்கள்

195.  தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள் உள்ள இடம்?

கடலூர் மாவட்டம் நெய்வேலி, திருவள்ளூர் மாவட்டம் எண்ணுர்

196.  தமிழ்நாட்டில் நீர்மின் நிலையங்கள் உள்ள இடம்?

சேலம் மாவட்டம் மேட்டூர் ,திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்

197.  தமிழ்நாட்டில் அணுமின் நிலையங்கள் உள்ள இடம் ?

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் ,திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம்

198.  தமிழ்நாட்டில் காற்றாலை அமைந்துள்ள இடம்?

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு

199.  அனல் மின் நிலையங்களில் எந்த ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?

வெப்ப ஆற்றல்

200.          நீர் மின் நிலையங்களில் எந்த ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?

இயக்க ஆற்றல்

201.  அதிக காலம் இயங்கக் கூடியவை மற்றும் சிக்கனமான மின் நிலையங்கள் எது?

நீர் மின் நிலையங்கள்

202.  அணுமின் நிலையங்களில் என்ன ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?

அணு ஆற்றல் , இயக்க ஆற்றல்

203.காற்றாலை மின் நிலையங்களில் என்ன ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது ?

இயக்க ஆற்றல்

204.         வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் கருவியின் பெயர் என்ன? 

மின்கலன்

205. மின்கலங்களில் நீர் மற்றும் எதிர்மின் அயனிகளைத் தரக்கூடிய எது மின்பகுளி ஆக எடுத்துக்
கொள்ளப்படுகிறது?

வேதி கரைசல்

206.         தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதை பொறுத்து மின்கலன்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன ? அவை என்னென்ன?

இரண்டு: முதன்மை மின்கலன்கள் மற்றும்  துணைமின் கலன்கள்

207.  எந்த வகை மின்கலங்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது?

முதன்மை மின்கலன்கள்

208.          சுவர் கடிகாரம் கைக்கடிகாரம் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் எது?

முதன்மை மின்கலன்

209.         பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய மின்கலன் எது ?

துணை மின்கலன்

210.   இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்களை இணைத்து எது உருவாக்கப்படுகிறது?

மின்கல அடுக்கு

211.   மின்கலத்தின் நேர் முனையிலிருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதைக்கு என்ன பெயர் ?

மின்சுற்று

212.   மின்னோட்டத்தை தேவையானபோது செலுத்தவோ நிறுத்தவோ பயன்படும் அமைப்பின் பெயர் என்ன?

சாவி

213.  ஒரு மின்சுற்றில் சாவியானது திறந்த நிலையில் இருந்தால் அந்த மின்சுற்றில் மின்னோட்டம் செல்லாது.அத்தகைய
மின்சுற்று எவ்வாறு அழைக்கப்படும்?

 திறந்த மின்சுற்று

214.  மின்சுற்றின் வகைகள் என்னென்ன?

எளிய மின்சுற்று ,தொடர் இணைப்பு, பக்க இணைப்பு

215.   ஒரு சாவி,ஒரு மின்கலன் மற்றும் இணைப்பு கம்பி கொண்டு உருவாக்கப்படும் மின்சுற்று எவ்வாறு அழைக்கப்படும்?

எளிய மின்சுற்று

216.  ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்குகள் தொடராக இருக்குமாறு சாவி மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் மூலம் இணைக்கப்படும் மின்சுற்று எவ்வாறு அழைக்கப்படும்?

தொடரிணைப்பு மின்சுற்று

217.   எந்த மின்சுற்றில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும் மின்சுற்று தொடர்பில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்?

தொடரிணைப்பு மின்சுற்று

218.   ஒன்றுக்கும் மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக இருக்குமாறு சாவிகள் மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப்படும் இணைப்பு?

பக்க இணைப்பு மின்சுற்று

219.  மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் எது?

ஈல்

220. ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவி எது ?

அம்மீட்டர்

221.    அம்மீட்டர் கருவியானது மின்சுற்றில் எந்த இணைப்பில் இணைக்கப்படவேண்டும்?

தொடர் இணைப்பு

222.  கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே எவ்வாறு அழைக்கப்படும்?

மின்னோட்டம்

223.  எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்?

மின்கடத்திகள்

224.   எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்கள் செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்?

அரிதிற்கடத்திகள் அல்லது மின்கடத்தாப் பொருள்கள்

225. தாமஸ் ஆல்வா எடிசனின் காலம் என்ன ?

பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18 1931

226.  தாமஸ் ஆல்வா எடிசன் எந்த நாட்டு கண்டுபிடிப்பாளர்?

அமெரிக்கா

227.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை உருவாக்கி உள்ளவர் யார்?

தாமஸ் ஆல்வா எடிசன்

228.  மைக்கேல் பாரடேவின் காலம் ?

1791-1867

229.  டைனமோவை கண்டறிந்தவர் யார்?

மைக்கேல் ஃபாரடே

230.“எனக்கு விருதுகள் எதுவும் தேவையில்லை. அறிவியல் மக்களுக்கு பயன்பட வேண்டும் .கடைசிவரை சாதாரண
மக்களின் விஞ்ஞானி ஆகவே வாழ விரும்புகிறேன்” எனக்கூறிய விஞ்ஞானி யார்?

மைக்கேல் ஃபாரடே

 

 

 

Tags :
You cannot copy content of this page