NEW 6th TERM 2 SCIENCE| CHANGE AROUND US ONELINERS | நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


95.   ஒரு பொருள் தன்னுடைய நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்விற்கு பெயர் என்ன?

மாற்றம்

96.    பொருளின் ஆரம்ப நிலைக்கு இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும் ?

மாற்றம்

97.    மாற்றங்களின் வகைகள் என்னென்ன?

மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள் ,மீள் மற்றும் மீளா மாற்றங்கள்,இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்,விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்,இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்

98.   சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன அவை எவ்வாறு அழைக்கப்படும்?

மெதுவான மாற்றங்கள்

99.    பருவநிலை மாற்றம் எதற்கு எடுத்துக்காட்டு? 

மெதுவான மாற்றங்கள்

100.         சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவு நேரத்தை எடுத்துக்கொள்கின்றன அவை எவ்வாறு அழைக்கப்படும்?

வேகமான மாற்றங்கள்

101.  பலூன் உடைதல் ,காகிதம் எறிதல் முதலியன எதற்கு எடுத்துக்காட்டு?

வேகமான மாற்றங்கள்

102.  சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?

மீள்மாற்றம்

103.  தொட்டாசிணுங்கி தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு? 

மீள் மாற்றம்

104.  சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்து பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்கு திரும்ப முடியாது அவை எவ்வாறு அழைக்கப்படும்?

மீளா மாற்றம்

105.  பால் தயிராக மாறுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

மீளா மாற்றம்

106.  எது ஒரு தற்காலிக மாற்றமாகும்?

இயற்பியல் மாற்றம்

107.  ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது எவ்வாறு அழைக்கப்படும்?

இயற்பியல் மாற்றங்கள்

108.  பனிக்கட்டி உருகுதல் உப்பு அல்லது சர்க்கரை கரைசல் ஆக்குவது, ரப்பர் வளையத்தை இழுத்தல் முதலான எதற்கு எடுத்துக்காட்டு?

இயற்பியல் மாற்றம்

109.  பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றும் முறைக்கு என்ன பெயர்?

உருகுதல்

110.  நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் முறைக்கு என்ன பெயர்?

ஆவியாதல்

111.     நீராவியை குளிர்வித்து நீராக மாற்றும் முறைக்கு என்ன பெயர் ?

ஆவி சுருங்குதல்

112.   நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதலுக்கு என்ன முறை ?

உறைதல்

113.   ஒரு திடப் பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவம் ஆகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவதற்கு என்ன பெயர்?

பதங்கமாதல்

114.   திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை எவ்வாறு அழைக்கின்றோம்?

கரைதல்

115.   கரைப்பொருளை கரைக்கக்கூடிய பொருளுக்கு என்ன பெயர் ?

கரைப்பான்

116.   கரைப்பானில் கரையக்கூடிய பொருளுக்கு என்ன பெயர் ?

கரைபொருள்

117.    கரைப்பொருள் கரைப்பானில் கரையும் போது என்ன உண்டாகிறது?

கரைசல்

118.   எது பொதுக் கரைப்பான் என அழைக்கப்படுகிறது ?

நீர்

119.    பொருள்களின் வேதிப் பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?

வேதியல் மாற்றங்கள்

120.  சுற்றுச்சூழலுக்கு பயன் தரும் அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காத நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்? 

விரும்பத்தக்க மாற்றங்கள்

121.   சுற்றுச்சூழலுக்கு பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்? 

விரும்பத்தகாத மாற்றங்கள்

122.   இயற்கையில் தானாகவே நிகழும் மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்? 

இயற்கையான மாற்றங்கள்

123.   மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்

 

 

 

Tags :
You cannot copy content of this page