NEW 6th TERM 2 SCIENCE| AIR ONELINERS | காற்று ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


 

1.       பூமியானது காற்றால் ஆன ஒரு மிகப்பெரிய மேல் உறையால் மூடப்பட்டுள்ளது இது எவ்வாறு அழைக்கப்படும்?

வளிமண்டலம்

2.        வளி மண்டலமானது புவிப் பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது? 

800 கிலோ மீட்டர்

3.       சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய பெரும்பாலான கதிர்களில் இருந்து நம்மை பாதுகாப்பது எது? 

வளி மண்டலம்

4.       வளிமண்டலம் புவிக்கு அருகில் மிக அதிகமாகவும் மேலே செல்ல செல்ல குறைவாகவும் காணப்படுவதற்கு காரணம் என்ன?

புவியீர்ப்பு விசை

5.       வளி மண்டலமானது எத்தனை அடுக்குகளால் ஆனது ?

ஐந்து

6.       வளிமண்டலத்தின் அடுக்குகள் என்னென்ன? 

அடி வளிமண்டலம் (troposphere),அடுக்கு வளிமண்டலம் (stratosphere),இடைவெளி மண்டலம் (mesosphere),அயனி மண்டலம்( ionosphere), புற வளிமண்டலம் (exosphere)

7.        பூமிக்கு அருகில் உள்ள நாம் வாழும் அதற்கு என்ன பெயர்?

அடிவளி மண்டலம்

8.       அடி வளிமண்டலம் புவி மேற்பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர் உயரம் வரையிலானது?

16 கிலோமீட்டர்

9.       காற்றின் இயக்கம் எந்த அடுக்கில் நடைபெறும் ?

அடிவளி அடுக்கு

10.     எந்த அடுக்கில் உள்ள நீராவி தான் மேகங்கள் உருவாக காரணமாக இருக்கிறது ?

அடிவளி அடுக்கு

11.     பூமியில் நாம் அனுபவிக்கும் நிலைக்கு எந்த அடுக்கு காரணமாகிறது?

அடிவளி அடுக்கு

12.    வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலேயை தவிர்ப்பதற்காக எந்த அடுக்குக்கு மேல் வானூர்திகள்
பறக்கின்றன?

அடிவளி அடுக்கு

13.    ஒரு குறிப்பிட்ட இடத்தில் காற்று வீசும் திசையை கண்டறிய எது பயன்படுகிறது?

காற்று திசைகாட்டி

14.     அடி வளிமண்டலத்திற்கு மேலே அமைந்துள்ள மண்டலம் எது?

அடுக்கு வளிமண்டலம்

15.     எந்த அடுக்கில் ஓசோன் படலம் அமைந்துள்ளது?

அடுக்கு வளிமண்டலம்

16.    சூரியனிலிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் படலம் எது?

ஓசோன் படலம்

17.     “காற்று என்பது ஒரு அடிப்படை பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கிய ஒரு கலவை “எனக் கூறியவர் யார் ?

ஜோசப் பிரிஸ்ட்லி(1774)

18.     ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?

ஜோசப் பிரிஸ்ட்லி

19.     நிறமற்ற அதிக வினைத்திறன் கொண்ட வாயுவிற்கு ஆக்சிஜன் என பெயரிட்டவர் யார்?

அண்டனி லவாய்சியர்

20.    அண்டனி லவாய்சியர் எந்த நாட்டு வேதியியலாளர்?

பிரெஞ்சு

21.    எரிதல் நிகழும்போது  பெரும்பாலான ஆக்சிஜன் என்னவாக
மாற்றப்படுகிறது?

கார்பன்-டை-ஆக்சைடு

22.     1730 முதல் 1799 வரை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்துவதற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை நிரூபித்தவர் யார்?

இன்ஜென்ஹவுஸ்

23.     எரிவதால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்பட்டு மாசடையும் காற்றினை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை புரிந்து ஆக்சிஜனை வெளியிட்டு தூய்மைப்படுத்துகிறது எனக் நிருபித்தவர் யார்?

இன்ஜென்ஹவுஸ்

24.    நைட்ரஜனை கண்டறிந்தவர் யார்?

டேனியல் ரூதர்போர்டு

25.     டேனியல் ரூதர்போர்டு எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்?

ஸ்காட்லாந்து

26.    கார்பன் டையாக்சைடு எந்த நீரில் பால் போல மாறும்?

சுண்ணாம்பு நீர்

27.     காற்றில் எத்தனை பங்கு நைட்ரஜன் வாயு உள்ளது?

ஐந்தில் நான்கு பங்கு

28.     காற்றில் இரண்டாவதாக உள்ள பெரும் பங்கு வாயு எது?

ஆக்சிஜன்

29.   காற்றில் ஆக்சிஜன் எத்தனை பங்கு உள்ளது தோராயமாக?

ஐந்தில் ஒரு பங்கு

30.    காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

78%

31.     காற்றில் ஆக்சிஜன் எத்தனை சதவீதம் உள்ளது?

21%

32.     காற்றில் கார்பன் டை ஆக்சைடு ஆர்கான் நீராவி மற்றும்
பிற வாயுக்கள் எத்தனை சதவீதம் உள்ளன?

1 சதவீதம்

33.     தொழிற்சாலை அதிகம் உள்ள நகரங்களில் உலவும் காற்றில் மற்ற இடங்களில் உள்ளதைவிட அதிக அளவு எந்த வாயு இருக்கும் ?

கார்பன் டை ஆக்சைடு

34.    கடலோர பகுதிகளில் உள்ள காற்றில் மற்ற இடங்களை விட அதிகளவு எது அடங்கியிருக்கும் ?

நீராவி

35.     காற்றோட்டம் உள்ள இடங்களில் உள்ள காற்றில் அதிக அளவு எது காணப்படும்?

தூசு பொருள்கள்

36.    வீச்சின் சமன்பாடு என்ன?

அதிகபட்ச அளவு – குறைந்தபட்ச
அளவு

37.     ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்விற்கு என்ன பெயர்? 

எரிதல்

38.     ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுக்கு என்ன பெயர்?

 உள்ளெரிதல்

39.    தாவரங்கள் வளிமண்டல காற்றுடன் நிகழ்த்தும் வாயுப் பரிமாற்றம் அவற்றின்  இலைகளிலுள்ள க்ஷ எந்த மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது?

 ஸ்டொமட்டா

40.    தாவரங்கள் அவற்றிற்கான உணவினை எதன் மூலம் உற்பத்தி செய்கின்றன?

 ஒளிச்சேர்க்கை

41.     ஒளிச்சேர்க்கையின் போது சூரிய ஒளியை உறிஞ்சப் பயன்படும் பெரும்பாலான தாவரங்களில் காணப்படும் நிறமி எது?

பச்சையம்

42.    நாம் சுவாசிக்கும் பொழுது அதில் உள்ள ஆக்சிஜன் செரிக்கப்பட்ட உணவு பொருட்களுடன் வேதிவினை புரிந்து எவற்றை உருவாக்குகிறது?

கார்பன் டை ஆக்சைடு ,நீராவி
மற்றும் ஆற்றல்

43.    உணவுப் பொருளுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு நீராவி மற்றும் ஆற்றல் உருவாகும் நிகழ்விற்கு என்ன பெயர் ?

சுவாசம்

44.    நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் எந்த வாயுவைத் தவிர மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும்?

நைட்ரஜன்

45.     நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 78% ஆக உள்ள நைட்ரஜன் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?

78%

46.    நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 21% ஆக உள்ள ஆக்ஸிஜன் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?

16%

47.    நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 0.03% ஆக உள்ள கார்பன் டையாக்சைடு வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?

4%

48.   நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 0.95% ஆக உள்ள மந்த வாயுக்கள் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக
இருக்கும்?

0.95%

49.   கார்பன் டையாக்சைடு‌ எந்த வெப்பநிலையில் குளிருவிக்கும் பொழுது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக
திட நிலைக்கு மாறுகின்றது?

 -57°C

50.    கார்பன் டை ஆக்சைடு திரவ நிலையை அடையாமல் நேரடியாக திட நிலைக்கு மாறியப்பின் எவ்வாறு அழைக்கப்படும் ?

 உலர் பனிக்கட்டி

 

 

 

Tags :
You cannot copy content of this page