DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
55. கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் எது?
பூம்புகார்
56. பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது ?
வங்காளவிரிகுடா
57. பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் தற்போதைய எந்த இடத்தின் அருகே உள்ளது?
மயிலாடுதுறை
58. பூம்புகார் நகரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்?
புகார், காவிரிப்பூம்பட்டினம்
59. எந்த அரசின் துறைமுக நகரமாக பூம்புகார் விளங்கியது?
சோழ அரசு
60. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்து எந்த சங்க இலக்கிய நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்?
பட்டினப்பாலை சிலப்பதிகாரம் மணிமேகலை
61. கண்ணகியின் தந்தை யார் ?
மாநாய்கன்
62. மாநாய்கன் என்பதன் பொருள்?
பெருங்கடல் வணிகம்
63. கோவலனின் தந்தை பெயர் ?
மாசாத்துவன்
64. மாசாத்துவன் என்பதன் பொருள் ?
பெருவணிகன்
65. கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று வணிகர்கள் கருதியதாக எந்த நூல் கூறுகிறது ?
பட்டினப்பாலை
66. பட்டினப்பாலையின் ஆசிரியர் மற்றும் காலம்?
கடியலூர் உருத்திரங்கண்ணனார் கிமு இரண்டாம் நூற்றாண்டு
67. கடல் வழியாக எவை இறக்குமதி செய்யப்பட்டன ?
குதிரைகள்
68. தரைவழி தடங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
கருமிளகு
69. வடமலையிலிருந்து எது இறக்குமதி செய்யப்பட்டது?
தங்கம்
70. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்?
சந்தனம்
71. தென்கடல் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
முத்து
72. கிழக்குப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
பவளம்
73. ஈழத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
உணவுப் பொருள்
74. சங்கம் வளர்த்த நகரம் என்று அழைக்கப்படுவது?
மதுரை
75. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்தவர்கள் எத்தனை பேர்?
49 பேர்
76. எந்த நாட்டின் அரசர் முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்தார்?
பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன்
77. உவரி எந்த துறைமுகத்திற்கு அருகில் உள்ளது?
கொற்கை
78. கொற்கை யாருடைய துறைமுகம்?
பாண்டியர்
79. எந்த நாட்டின் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையிலிருந்து உள்ளது?
ரோமானியர்
80. எத்தனை வகை அங்காடிகள் மதுரையில் இருந்துள்ளன?
நாளங்காடி, அல்லங்காடி
81. இரவு பகல் வேறுபாடு இல்லாமல் மதுரை நகரம் விளங்கியதால் அது எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
தூங்கா நகரம்
82. எந்தப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய செய்திகள் காணப்படுகிறது?
மெகஸ்தனிஸ்
83. சந்திரகுப்தரின் எந்த அமைச்சர் மதுரையை பற்றி தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்?
சாணக்கியர்
84. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற எந்த சீன வரலாற்று ஆசிரியர் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்து இருக்கிறார் ?
யுவான் சுவாங்
85. துறைமுக நகரம் என அழைக்கப்படுவது?
புகார்
86. வணிக நகரம் என அழைக்கப்படுவது ?
மதுரை
87. கல்வி நகரம் என அழைக்கப்படுவது?
காஞ்சி
88. நகரங்களில் சிறந்தது காஞ்சி எனக் கூறியவர்?
காளிதாசர்
89. கல்வியில் கரையிலாத காஞ்சி என கூறிய நாயன்மார் யார்?
திருநாவுக்கரசர்
90. புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில் காஞ்சியும் ஒன்று என எந்த சீன வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
யுவான்சுவாங்
91. தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம்?
காஞ்சி
92. தர்மபாலர் ,ஜோதிபாலர், சுமதி ,போதிதர்மர் போன்றவர்கள் எந்த நகரத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள்?
காஞ்சி
93. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது?
காஞ்சி
94. காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
பல்லவ அரசர் ராஜசிம்மன்
95. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
கோவை ,நீலகிரி ,கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்
96. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
தஞ்சை ,திருவாரூர், நாகை, திருச்சி ,புதுக்கோட்டை மாவட்டங்கள்
97. பாண்டிய நாடு எந்த இடங்களை உள்ளடக்கியிருந்தது?
மதுரை ,ராமநாதபுரம் ,சிவகங்கை ,தூத்துக்குடி ,திருநெல்வேலி உள்ளிட்ட தென்
மாவட்டங்கள்
98. தொண்டைநாடு எவற்றை உள்ளடக்கியிருந்தது?
காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,தர்மபுரி ,திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம்
மாவட்டத்தின் வடக்கு பகுதி
99. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்கு கழித்தார்?
காஞ்சி
100. ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது ?
காஞ்சிபுரம்
101. சோறுடைத்து என அழைக்கப்படும் நாடு?
சோழ நாடு
102. முத்துடைத்து என அழைக்கப்படும் நாடு?
பாண்டிய நாடு
103. வேழமுடைத்து என அழைக்கப்படும் நாடு?
சேர நாடு
104. சான்றோருடைத்து என அழைக்கப்படும் நாடு?
தொண்டை நாடு