NEW 6TH TERM 1 SCOIAL | GEOGRAPHY ONELINERS பேரண்டமும் மற்றும் சூரியக் குடும்பம் ஒரு வரி வினாக்கள்| | TNPSC GROUP 4,1,2

பேரண்டமும் மற்றும் சூரியக் குடும்பம்

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP |

JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


105. அண்டத்தைப் பற்றி படிக்கும் படிப்பின் பெயர்?

அண்டவியல் cosmology

106.காஸ்மாஸ் என்பது எந்த மொழிச்சொல்?

கிரேக்கம்

107.  பேரண்டம் எப்போது உருவானதாக நம்பப்படுகிறது?

15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

108.  ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விண்மீன் திரள் மண்டலம்

109. பெரு வெடிப்புக்குப் நிகழ்விற்கு பின் சுமார் எத்தனை வருடங்களுக்குப்பின் பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் உருவானது?

5 பில்லியன் வருடங்களுக்குப்பின்

110.  புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?

ஆண்ட்ரோமெடா மற்றும் மெகல்லனிக் க்ளவுட்ஸ்

111.    ஓர் ஓளியானது ஓராண்டு பயணிக்கும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஒரு ஒளியாண்டு

112.   ஒளியின் திசை வேகம் வினாடிக்கு எவ்வளவு?

மூன்று லட்சம் கிலோ மீட்டர்

113.   ஒலியின் திசை வேகம் எவ்வளவு? 

வினாடிக்கு 330 மீட்டர்

114.   சோலார் என்பது எந்த மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது?

இலத்தீன் (sol)

115.   Sol என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் என்ன?

சூரியக்கடவுள்

116.   சூரியன் சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

99.8%

117.  சூரியன் எந்த வாயுக்களால் ஆனது?

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

118.   சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை?

6000°C

119.   பூமியின் சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை வந்தடைய எடுத்துக்கொள்ளும் காலம்?

8.3 நிமிடங்கள்

120.  கோள் என்றால் என்ன பொருள்?

சுற்றி வருபவர்

121.   எந்த இரு கோள்களை தவிர மற்ற பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகார சுற்றில் சுற்றி வருகிறது? 

வெள்ளி மற்றும் யுரேனஸ்

122.   “வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு” என்ற பாடல் பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் என குறிக்கும் எந்த சங்க நூலில்  குறிப்பிடப்பட்டுள்ளது ?

சிறுபாணாற்றுப்படை

123.   உட்புற கோள்கள் என அழைக்கப்படுபவை?

புதன் வெள்ளி பூமி மற்றும் செவ்வாய்

124.  உட்புற கோள்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

புவிநிகர் கோள்கள்

125.   வெளிப்புற  கோள்கள் என அழைக்கப்படுபவை எவை?

வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

126.   வெளிப்புறக் கோள்கள்  வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

வியாழன் நிகர் கோள்கள்

127.   வெளிப்புறக் கோள்களிலா வாயுக்கள் நிறைந்து காணப்படுவதால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?

வளிமக் கோள்கள்

128.  சிறு கோள் மண்டலம் எந்த இரு கிரகங்களுக்கு இடையே  காணப்படுகிறது?

 செவ்வாய் வியாழன்

129.  சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகச்சிறிய கோள் எது?

புதன்

130.  புதன் கிரகமானது எந்த கடவுளின் பெயரால் மெர்குரி என அழைக்கப்படுகிறது?

ரோமானிய கடவுள்களின் தூதுவர்

131.   இரட்டை கோள்கள் என அழைக்கப்படுபவை எவை?

வெள்ளி மற்றும் பூமி

132.   வெள்ளி கிரகம் தன்னை தானே சுற்றி கொள்ள எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறது?

243 நாட்கள்

133.   வெள்ளி கிரகம் எந்த திசையில் சுற்றுகிறது?

கிழக்கிலிருந்து மேற்காக

134.  வெள்ளி கிரகம் எந்த கடவுளின் பெயரால் வீனஸ் என அழைக்கப்படுகிறது?

அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுள்

135.   வெள்ளி கிரகம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடிவெள்ளி மற்றும் அந்தி வெள்ளி

136.  நிலவிற்கு அடுத்தபடியாக இரவில் பிரகாசமாக தெரியும் விண் பொருள் எது?

வெள்ளி

137.     சூரிய குடும்பத்தில் புவியானது எத்தனையாவது மிகப்பெரிய கோள்?

ஐந்தாவது

138.  பூமி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நீலக்கோள் மற்றும் நீர் கோள்

139.  நமது சூரிய குடும்பத்தில் ரோமானிய மற்றும் கிரேக்க கடவுளின் பெயரால் அழைக்கப்படாத கோள் எது?

புவி

140.  புவியின் துருவ விட்டம் எவ்வளவு?

12,714 கிலோமீட்டர்

141.   புவியின் நிலநடுக்கோட்டு விட்டம் எவ்வளவு?

12,756 கிலோமீட்டர்

142.  பூமி சூரியனை வினாடிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது ?

30 கிலோமீட்டர்

143.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு?

150 மில்லியன் கிலோமீட்டர்

144.  நபது சூரிய குடும்பத்தின் இரண்டாவது மிகச் சிறிய கோள் ?

செவ்வாய்

145.   செவ்வாய் எந்த கடவுளின் பெயரால் மார்ஸ் என அழைக்கப்படுகிறது?

ரோமானிய போர்க்கடவுள்

146.  செவ்வாயின் வேறு பெயர் என்ன?

சிவந்த கொள்

147.   செவ்வாய்க் கோள் சிகப்பு நிறமாக காட்சி அளிப்பதற்கான காரணம் என்ன?

மேற்பரப்பிலுள்ள இரும்பு ஆக்சைடு

148.  செவ்வாயின் துணைக்கோள்கள் என்னென்ன ?

இரண்டு : ஃபோபஸ்  மற்றும் டீமஸ்

149. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதி ஆராய்வதற்காக எந்த ஆண்டு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது?

24.09.2014

150.  செவ்வாய் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது ?

4-வது இடம்

151.   சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள்?

வியாழன்

152.   வியாழன் கிரகம் சூரியனிடமிருந்து எத்தனையாவதாக அமைந்துள்ளது?

ஐந்தாவது

153.   வியாழன் கிரகம் எந்த கடவுளின் பெயரால் ஜுபிடர் என  அழைக்கப்படுகிறது ?

ரோமானியர்களின் முதன்மை கடவுள்

154. நிலா மற்றும் வெள்ளிக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரிவது?

வியாழன் கிரகம்

155.   நமது சூரிய குடும்பத்தில் எந்த கோள் தன்னச்சில் மிகவும் வேகமாக சுழல்கிறது?

வியாழன்

156.  வியாழனுடைய மிகப்பெரிய துணைக்கோள்கள் என்னென்ன ?

ஐயோ ,யூரோப்பா ,கனிமீடு மற்றும் கேலிஸ்டோ

157.   சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள்?

சனி

158.  சூரிய குடும்பத்தில் சனி கிரகம் சூரியனிலிருந்து எத்தனாவது அமைந்துள்ளது?

ஆறாவது

159.  சனி கிரகம் எந்த கடவுளின் பெயரால் சாட்டர்ன்(saturn) என அழைக்கப்படுகிறது ?

ரோமானிய வேளாண்மை கடவுள்

160.  சனி கிரகம் எத்தனை துணைக் கோள்களைக் கொண்டுள்ளது?

62 துணைக்கோள்கள்

161.   சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கோள் எது?

டைட்டன்

162.  சூரிய குடும்பத்தில் காணப்படும் துணைக் கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களைக் கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள் எது?

டைட்டன்

163.   எந்த ஆண்டு யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது?

1781

164.  யுரேனசைக் கண்டுபிடித்த வானியல் அறிஞர் யார்?

வில்லியம் ஹெர்ஷல்

165.  தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் எது?

யுரேனஸ்

166.   யுரேனஸ் சூரியனிடமிருந்து எத்தனாவதாக அமைந்துள்ளது?

ஏழாவது

167.  யுரேனஸ் பச்சை நிறமாக தோன்றுவதற்கு காரணம் ?

மீத்தேன் வாயு

168.  யுரேனஸ் எந்தக் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது?

கிரேக்க  விண் கடவுள்

169.  எந்த கிரகத்தின  அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டு ஓடுவது
போன்று சூரியனை சுற்றி வருகிறது?

யுரேனஸ்

170.   யுரேனஸின் மிகப்பெரிய துணைக்கோள் எது?

டைட்டானியா

171.   ரோமானிய கடல் கடவுளின் பெயரைக் கொண்ட கிரகம் எது?

நெப்டியூன்

172.   நெப்டியூனின் மிகப்பெரிய துணைக்கோள் எது?

டிரைட்டன்

173.   நெப்டியூனில் காணப்படும் எந்த நிறம் யுரேனஸ் கோளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது?

நீலம் மற்றும் வெள்ளை

174.  சூரிய குடும்பத்தில் காணப்படும் ஐந்து குறுங்கோள்கள் என்னென்ன?

புளூட்டோ,செரஸ்,ஈரிஸ்,மேகமேக் மற்றும் ஹௌமியா

175.   நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும் புவியை சுற்றி வரவும் எடுத்துக்கொள்ளும் நேரம்?

27 நாட்கள் 8 மணி நேரம்

176.  நிலவு புவியில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது?

384400 கி.மீ

177.   நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவில் அனுப்பப்பட்ட முதல் விண்கலம்?

சந்திராயன்-1

178.  சந்திராயன்-1 எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?

2008

179.   சூரியனை சுற்றி வரும் சிறிய திடப் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

சிறுகோள்கள்

180.  எந்த கோள்களுக்கிடையே சிறுகோள்கள் மண்டலம் காணப்படுகிறது?

செவ்வாய் மற்றும் வியாழன்

181.   புவிக்கு அருகில் 76 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய விண்மீன் எது?

ஹேலி

182. ஹேலி விண்மீன்  கடைசியாக எந்த ஆண்டு வானில் தென்பட்டது?

1986

183.  புவியின் மேற்பரப்பை தாக்கும் விண்கற்கள் எவ்வாறு
அழைக்கப்படுகிறது ?

விண்வீழ்கற்கள்

184.  புவி தன் அச்சில் எவ்வளவு சாய்ந்து தன்னைத்தானே சுற்றி வருகிறது?

23½°

185. நில நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழலும் வேகம் எவ்வளவு ?

1670 கிலோமீட்டர் /மணி

186.  60° வடக்கு அட்சரேகையில் புவியின் சுழலும் வேகம்
எவ்வளவு?

845 கி.மீ/மணி

187.   புவியின் சுழலும் வேகம் எங்கு சுழியமாக இருக்கும்?

துருவம்

188.  புவியானது எந்த  திசையில் சுழலுகிறது?

மேற்கிலிருந்து கிழக்காக

189.   பூமியானது ஒரு முறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்?

 23 மணிநேரம் 56 நிமிடங்கள் 4.09 விநாடிகள்

190.  புவியின் ஒளிபடும் பகுதியையும் ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு என்ன பெயர் ?

ஒளிர்வு வட்டம்

191.   எந்த காலம்வரை புவியின் வட அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும்?

மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை

192.  புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்விற்கு என்ன பெயர்?

சூரிய அண்மை(perihelion)

193.   புவி தம் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு தொலைவில் காணப்படும் நிகழ்வு?

சூரிய சேய்மை(aphelion)

194.  எந்த காலம்வரை புவியின் தென் அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும்?

 செப்டம்பர் 23 வரை முதல் மார்ச் 21

195. எந்த நாட்களில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும்?

மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

196.   சம பகலிரவு நாட்கள் என அழைக்கப்படுபவை?

மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

197.  எப்போது கடகரேகை மீது சூரியனின் செங்குத்து கதிர்கள் விழுவதால் வட அரைக்கோளத்தில் மிக நீண்ட பகல் பொழுதை கொண்டிருக்கும் ?

ஜூன் 21

198.   எந்த நாள் கோடை கால கதிர் திருப்பம் என அழைக்கப்படுகிறது ?

ஜூன் 21

199.  எந்த நாள் குளிர் கால கதிர் திருப்பம் என அழைக்கப்படுகிறது?

டிசம்பர் 22

200. குளிர்கால கதிர் திருப்பத்தின்போது சூரியனின் செங்குத்து கதிர்கள் எந்த ரேகையின் மீது விழும்?

மகரரேகை

201.   உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உயிர்க்கோளம்

202.  லித்தோஸ்பியர்(lithosphere) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

கிரேக்கம்

203.லித்தோஸ் என்ற கிரேக்க பதத்திற்கு என்ன பொருள்?

 பாறை

204. ஹைட்ரோஸ்பியர்(hydrosphere) என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?

கிரேக்கம்

205.அட்மாஸ்பியர் (atmosphere) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

கிரேக்கம்

206. வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் முதன்மையான வாயுக்கள் எவை?

நைட்ரஜன் 78% மற்றும் ஆக்ஸிஜன் 21%

207. பயோ என்ற கிரேக்கச் சொல்லுக்கு என்ன பொருள் ?

உயிர்

208. மன்னார் உயிர்கோள பெட்டகம் இந்திய பெருங்கடலில் எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது?

10,500

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page