NEW 6TH TERM 1 SCOIAL |GEOGRAPHY நிலப்பரப்பும் பெருங்கடலும் | TNPSC GROUP 4,1,2 2021

 

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF


 

209.         புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது ?

71%

210. புவியின எத்தனை சதவீதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது?

29 சதவீதம்

211.  முதல்நிலைத் நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுபவை? 

கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்

212.   சங்க இலக்கியத்தில் நில வகைப்பாடு எத்தனை வகையா பிரிக்கப்பட்டுள்ளது ?

5: குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை

213.    மலையும் மலை சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படும்?

குறிஞ்சி

214.  காடும் காடு சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படும்?

முல்லை

215.  வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?

மருதம்

216. கடலும் கடல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?

நெய்தல்

217.   மணலும் மணல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?

பாலை

218.  மிகப் பெரிய நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

கண்டங்கள்

219. பரந்த  நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?

பெருங்கடல்கள்

220.  உலகில் எத்தனை கண்டங்கள் உள்ளன ?

ஏழு

221.  உலகில் உள்ள கண்டங்கள் என்னென்ன?

ஆசியா ,ஆப்பிரிக்கா ,வட அமெரிக்கா,தென் அமெரிக்கா ,அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா

222.  உலகின் மிகப்பெரிய கண்டம் எது ?

ஆசியா

223. உலகின் மிகச்சிறிய கண்டம் ?

ஆஸ்திரேலியா

224.  புவியில் எத்தனை பெருங்கடல்கள் காணப்படுகின்றன?

ஐந்து

225.  புவியிலுள்ள பெருங்கடல்கள் என்னென்ன?

பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ,இந்தியப் பெருங்கடல் ,தென் பெருங்கடல் ,மற்றும் ஆர்டிக் பெருங்கடல்

226.  இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்க கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர் பரப்புகளைத் பிரிக்கக் கூடியதுமான மிகக்குறுகிய நிலப்பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படும் ?

நிலச்சந்தி

227.  மிகப்பெரிய பெருங்கடல் எது ?

பசுபிக் பெருங்கடல்

228.   மிகச்சிறிய பெருங்கடல் எது?

ஆர்க்டிக் பெருங்கடல்

229. இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுபவை?

மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள்

230. சுற்றுப்புற நிலப்பகுதியை விட எத்தனை உயரத்துக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் என அழைக்கப்படும்?

600 மீட்டர்

231.    தொடர்ச்சியாக நீண்டு காணப்படும் மலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

மலைத்தொடர்

232.  இமய மலைத்தொடர் எங்கு உள்ளது ?

ஆசியா

233. ராக்கி மலைத்தொடர் எங்கு உள்ளது?

வட அமெரிக்கா

234. ஆண்டிஸ் மலைத்தொடர் எங்குள்ளது?

தென் அமெரிக்கா

235.  ஒரு மலைத்தொடரின் உயரமான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

சிகரம்

236.  உலகிலேயே உயரமான சிகரம் எது?

இமய மலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரம்

237.   எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன ?

8848 மீட்டர்

238.  சர்வதேச மலைகள் தினம் எப்போது ?

டிசம்பர் 11

239.  சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

பீடபூமி

240.     உலகத்தின் கூரை என அழைக்கப்படுவது எது?

பீடபூமி

241.   உலகிலேயே உயர்ந்த பீடபூமி  எது?

திபெத் பீடபூமி

242.  பீடபூமி சமமான மேற்பரப்பை கொண்டுள்ளதால் அது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?

மேசை நிலம்

243.  சோட்டா நாகபுரி பீடபூமி எங்கு உள்ளது?

இந்தியா

244.  தென்னிந்தியாவிலுள்ள தக்காண பீடபூமி எதனால் ஆனது?

எரிமலை பாறைகள்

245.   தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகள் என்னென்ன?

தர்மபுரி பீடபூமி, கோயம்புத்தூர் பீடபூமி, மற்றும் மதுரை பீடபூமி

246.   கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?

சமவெளிகள்

247.  தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சமவெளிகள் எந்த ஆறுகளால் உருவாக்கப்பட்டவை?

காவிரி மற்றும் வைகை

248.பண்டைய நாகரீகங்களின் தொட்டில் என அழைக்கப்படுபவை?

ஆற்று சமவெளிகள்

249.  ஆறுகள் பனியாறுகள் காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கிய செயல்கள் என்ன?

அழித்தல் மற்றும் படிய வைத்தல்

250.புவியின் மேற்பரப்பில் உள்ள பொருள்களை அரித்து அகற்றுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அரித்தல்

251.    அரிக்கப்பட்ட பாறைத் துகள்கள் கடத்தப்பட்டு தாழ்நிலப் பகுதிகளில் படிய வைக்கப்படுகின்றன இச்செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

படிய வைத்தல்

252.   விண்வெளியில் இருந்து பார்க்கும்போது புவி என்ன நிறமாக காட்சியளிக்கும் ?

நீலநிறம்

253.  உலகில் உள்ள பெரும் கடல் பரப்பில் பசுபிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

47%

254.  உலகில் உள்ள பெரும் கடல் பரப்பில் அட்லாண்டிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது ?

23%

255. உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் இந்திய பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

20%

256. உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் தென் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

6 சதவீதம்

257. உலகில் உள்ள பெருங்கடல்களில் ஆர்டிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

 4%

258.  புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் எது?

பசிபிக் பெருங்கடல்

259.  பசுபிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை பகுதியைக் கொண்டுள்ளது? 

மூன்றில் ஒரு பகுதி

260.   பசுபிக் பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு ?

168. 72 மில்லியன் சதுர கிலோமீட்டர்

261.  பசிபிக் பெருங்கடலின் மேற்கில் எவை எல்லைகளாக அமைந்துள்ளன?

ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா

262.  பசுபிக் பெருங்கடலின் கிழக்கில் எல்லைகளாக அமைந்துள்ளவை எவை?

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

263. பசிபிக் பெருங்கடல் என்ன வடிவத்தில் காணப்படுகிறது?

முக்கோண வடிவம்

264. பசிபிக் பெருங்கடலின் நிலையும் ஆர்க்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது?

பெரிங் நீர்ச்சந்தி

265. புவியின் ஆழமான பகுதி எது?

மரியானா அகழி

266.மரியானா அகழியின் ஆழம் எவ்வளவு?

10994 மீட்டர்

267.  பசுபிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?

பேரிங் கடல் ,சீனக் கடல், ஜப்பான் கடல், தாஸ்மானியா கடல் , பிலிப்பைன்ஸ் கடல்

268.பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன ?

இந்தோனேஷியா ,பிலிப்பைன்ஸ் ,ஜப்பான், நியூஸிலாந்து

269.  பசிபிக் பெருங்கடலை பற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நெருப்பு வளையம்

270.  பசிபிக் என பெயரிட்டவர் யார் ?

ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன்

271.   பசுபிக் என்பதன் பொருள் என்ன?

அமைதி

272.  புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல் எது?

அட்லாண்டிக் பெருங்கடல்

273.   அட்லாண்டிக் பெருங்கடல் பரப்பளவு எவ்வளவு?

85.13 மில்லியன் சதுர கிலோமீட்டர்

274.  அட்லாண்டிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில்
எத்தனை பங்கை கொண்டுள்ளது?

ஆறில் ஒரு பங்கு

275. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளவை ?

கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா  மேற்கே வட அமெரிக்கா தென் அமெரிக்கா

276.  அட்லாண்டிக் பெருங்கடல் என்ன வடிவத்தை போன்று உள்ளது?

ஆங்கில எழுத்து S

277. அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது ?

ஜிப்ரால்டர்

278.   அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எது?

போர்டோ ரிக்கோ அகழியில் காணப்படும் மில்வாக்கி அகழி

279.  அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எத்தனை மீட்டர் ஆழமுடையது?

8600 மீட்டர்

280.     அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?

கரீபியன் கடல் ,மெக்சிகோ வளைகுடா,  வடகடல் ,கினியா வளைகுடா, மத்தியதரைக்கடல்

281.   அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன?

செயின்ட் ஹெலனா,நியூபவுண்ட்லாந்து ,ஐஸ்லாந்து,ஃபாக்லாந்து

282.  இந்திய பெருங்கடல் புவியின் எத்தனையாவது மிகப்பெரிய பெருங்கடல் ?

மூன்றாவது

283.  இந்தியப் பெருங்கடலின் பரப்பு எவ்வளவு ?

70.56 மில்லியன் சதுர கிலோமீட்டர்

284.இந்திய பெருங்கடல் என்ன வடிவத்தைக் கொண்டுள்ளது? 

முக்கோண வடிவம்

285.   இந்திய பெருங்கடல் என்ன கண்டங்களால் சூழப்பட்டுள்ளது?

மேற்கு ஆப்பிரிக்கா வடக்கே ஆசியா, கிழக்கே ஆஸ்திரேலியா

286.இந்திய பெருங்கடலில் காணப்படும் தீவுகள் என்னென்ன?

அந்தமான் நிக்கோபார் ,லட்சத்தீவுகள் ,மாலத்தீவுகள், இலங்கை ,மொரீஷியஸ் ,ரியூனியன் தீவுகள்

287.  இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்சந்தி எது?

மலாக்கா நீர் சந்தி

288.  இந்திய பெருங்கடலில் எல்லையோர கடலாக அமைந்துள்ளவை எவை?

வங்காள விரிகுடா, அரபிக் கடல் ,பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல்

289.இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி எது?

ஜாவா அகழி

290.  ஜாவா அகழியின் ஆழம் என்ன ?

7,725 மீ

291.  வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கும் நீர் சந்தி எது?

பாக் நீர் சந்தி

292.  இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கும் கால்வாய்?

 6° டிகிரி கால்வாய்

293. மாலத் தீவையும் மினிகாய் தீவையும் பிரிக்கும் கால்வாய்?

8°டிகிரி கால்வாய்

294.லட்சத்தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கும் கால்வாய்?

9°டிகிரி கால்வாய்

295. அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கும் கால்வாய்?

10°டிகிரி கால்வாய்

296.தென் பெருங்கடல் எந்த கண்டத்தை சுற்றி அமைந்துள்ளது?

அண்டார்டிகா

297.  தென்பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு?

21.96 மில்லியன் சதுர கிலோமீட்டர்

298.தென்பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?

ராஸ் கடல் , வெடல் கடல்,  மற்றும் டேவிஸ் கடல்

299.  தென்பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன ?

ஃபேர்வெல் தீவு , பௌமன் தீவு, ஹாட்ஸ் தீவு

300.   தென்பெருங்கடலின் ஆழமான பகுதி எது?

தென் சான்ட்விச் அகழி

301. தென் சான்ட்விச் அகழியின் ஆழம் என்ன?

7,235 மீ.

302.ஆர்க்டிக்பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு?

15.56 மில்லியன் சதுர கிலோமீட்டர்

303.ஆர்க்டிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?

நார்வே கடல் ,கிரீன்லாந்து கடல், கிழக்கு சைபீரியக் கடல் மற்றும் பேரண்ட் கடல்

304.  ஆர்க்டிக் பெருங்கடலில் காணப்படும் தீவுகள் என்னென்ன?

கிரீன்லாந்து தீவு ,நியூ சைபீரிய தீவு மற்றும் நவோயா செமல்யா தீவு

305.ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எது?

யுரேசியன் தாழ்நிலம்

306.   யுரேசியன் தாழ்நிலத்தின் ஆழம் என்ன?

5449 மீட்டர்

 

 

Tags :
You cannot copy content of this page