NEW 6TH TERM 1 SCOIAL CIVICS| POLITY பன்முகத்தன்மை அறிவோம் | TNPSC GROUP 4,1,2 2021

  1. இந்தியாவில் பன்முகத் தன்மை மேலோங்கி இருப்பதற்கான காரணம்?

மக்கள் இடம்பெயர்ந்து தங்கியதால்

  1. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் கடல்கள் பள்ளத்தாக்கு போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

கண்டம்

  1. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் மற்றும் பல்வேறு இயற்கை பிரிவுகள் முதலியவற்றை பெற்றிருப்பதால் இந்தியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?

துணை கண்டம்

  1. இந்தியாவின் அதிக மழை பொழியும் பகுதி எது?

மௌசின்ராம், மேகாலயா.

  1. இந்தியாவில் மிகக் குறைவான மழை பொழியும் பகுதி எது?

ஜெய்சால்மர், ராஜஸ்தான்

  1. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது?

குடும்பம்

  1. குடும்பம் என்பது எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை :கூட்டு குடும்பம் மற்றும் தனிக்குடும்பம்

  1. இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா எத்தனை மொழிகளை கொண்டுள்ளது?

122 முக்கிய மொழிகள் மற்றும் 1599 பிற மொழிகள்

  1. இந்தியாவில் காணப்படும் நான்கு முக்கிய மொழிக்குடும்பங்கள் என்னென்ன?

இந்தோ- ஆரியன் ,திராவிடன், ஆஸ்ட்ரோஆஸ்டிக் மற்றும் சீன திபெத்தியன்

  1. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பேசப்படும் முதல் ஐந்து மொழிகள் என்னென்ன?

இந்தி, வங்காளம், தெலுங்கு ,மராத்தி, தமிழ்

  1. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஹிந்தி பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?

43.63%

  1. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வங்காளம் பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?

8.30%

  1. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தெலுங்கு பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?

6.93%

  1. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மராத்தி பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?

7.09%

  1. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தமிழ் பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?

5.89%

  1. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் படி எத்தனை மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள?

22 மொழிகள்

  1. எந்த ஆண்டு இந்திய அரசால் தமிழ் மொழி முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ?

 2004

  1. தற்போது எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது?

ஆறு மொழிகள்

  1. சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ?

2005

  1. தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டன ?

2008

  1. மலையாளம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

2013

  1. எந்த ஆண்டு ஒரியா செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

2016

  1. இந்திய தொல்லியல் துறையில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை?

60%

  1. சத்ரியா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?

அசாம்

  1. மணிப்புரி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?

மணிப்பூர்

  1.  ஒடிசி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?

ஒடிசா

  1. யக்ஷகானம் எனும் நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது ?

கர்நாடகா

  1. குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது ?

ஆந்திரப் பிரதேசம்

  1. கதகளி எந்த மாநிலத்தைச் சேர்ந்த நடனம்?

கேரளா

  1. தமிழ்நாட்டின் நடனம் எது?

பரதநாட்டியம்

  1. கரகாட்டம் ஒயிலாட்டம் கும்மி தெருக்கூத்து பொம்மலாட்டம் புலி ஆட்டம் கோலாட்டம் தப்பாட்டம் முதலிய நடனங்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவை ?

தமிழ்நாடு

  1. தெய்யம் ,மோகினி ஆட்டம் முதலிய நாட்டுப்புற நடனங்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவை?

கேரளா

  1. பாங்க்ரா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?

பஞ்சாப்

  1. கார்பா,தாண்டியா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?

குஜராத்

  1. கல்பேலியா,கூமர் ஆகிய நடனங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?

ராஜஸ்தான்

  1. ராசலீலா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?

உத்தரபிரதேசம்

  1. சோலியா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?

உத்தரகாண்ட்

  1. பிஹு நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?

அசாம்

  1. வேற்றுமையில் ஒற்றுமை எனும் சொற்றொடர் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

டிஸ்கவரி ஆப் இந்தியா

  1. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார் ?

ஜவஹர்லால் நேரு

  1. இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால் இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என அழைத்தவர் யார்?

வரலாற்றாசிரியர் வி.ஏ.ஸ்மித்

 

Tags :
You cannot copy content of this page