NEW 6th TERM 1 SCIENCE| LIVING WORLD OF PLANTS ONELINERS | தாவரங்கள் வாழும் உலகம் ஒரு வரி வினாக்கள்| TNPSC GROUP 1,2,4

தாவரங்கள் வாழும் உலகம்

DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : TELEGRAM

DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF

 


 

108. உயிரினங்களின் வாழ்க்கை முறை, அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி பயிலும் இயற்கை அறிவியல் எது ?

 உயிரியல்

109.  பூக்கும் தாவரங்கள் எத்தனை முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன? அவை என்னென்ன?

இரண்டு,தண்டு தொகுப்பு வேர் தொகுப்பு

110.  நிலத்துக்கு கீழே காணப்படும் தாவரத்தின் முக்கிய அச்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வேர்

111.    வேர்கள் எந்தப் புவி நாட்டம்  உடையவை ?

நேர் புவி  நாட்டம்

112.   வேர் தொகுப்புகள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன?

இரண்டுவகை :ஆணி வேர்த்தொகுப்பு, சல்லி வேர் தொகுப்பு

113.   எந்த வேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாகின்றது?

முளை வேர்

114.   எந்த தாவரங்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது ?

இருவித்திலைத் தாவரங்கள்

115.   சல்லி வேர்த்தொகுப்பு எந்த தாவரங்களிலும் காணப்படுகிறது?

ஒருவித்திலைத் தாவரங்கள்

116.   நெல், புல், மக்காச்சோளம் முதலியவற்றின் என்ன வேர்த்தொகுப்பு காணப்படுகிறது தொகுப்பு?

 சல்லிவேர்த்தொகுப்பு

117.   கேரட் ,பீட்ரூட் போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எந்த பகுதியில் சேமிக்கின்றன?

வேர்கள்

118.   நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற பகுதிக்கு என்ன பெயர்?

தண்டு தொகுப்பு

119.   தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு என்ன பெயர் ?

கணு

120.  இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கணுவிடைப்‌பகுதி

121.   தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும்?

நுனிமொட்டு

122.   தண்டின் இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும் ?

கோணமொட்டு

123.   கரும்பு போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எங்கு சேமித்து வைக்கின்றன ?

தண்டுப்பகுதி

124. தாவரத்தின் பசுமையான தட்டையான பகுதிக்கு என்ன பெயர்?

இலைத் தாள் அல்லது இலைப்பரப்பு

125.   இலையின் மையத்தில் உள்ள முக்கிய நரம்பிற்கு என்ன பெயர்?

மைய நரம்பு

126.  தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

இலையடிப்பகுதி

127.  இலையடிப் பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன அதற்கு என்ன பெயர் ?

இலையடி செதில்கள்

128.  இலைகள் பசுமை நிறத்தில் உள்ளதற்கான காரணம் ?

பச்சை நிறமிகளான பச்சையம்

129.  தாவரத்தின் எந்த பாகத்தின் வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது?

இலைத்துளை

130.    எந்த தாவரத்தின் இலைகள் 3 மீட்டர் விட்டம் வரை வளரும்?

விக்டோரியா அமேசோனிக்கா

131.   நன்கு வளர்ச்சியடைந்த விக்டோரியா அமேசோனிக்காவின் இலையின் மேற்பரப்பு எத்தனை கிலோ எடையைத் தாங்கும்?

45 கிலோ கிராம்

132.   பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

இருவகைகள்: பூக்கும் தாவரம் ,பூவா தாவரம்

133.   விதை அமைந்திருக்கும் தன்மையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

இரண்டு வகைகள் :  மூடிய விதை தாவரங்கள்,
திறந்த விதை தாவரங்கள்

134.   மூடிய விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?

 ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

135.   திறந்த விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

ஜிம்னோஸ்பெர்ம்கள்

136.  ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

வாழிடம்

137.   நீர் வாழிடம் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும்: நன்னீர் வாழிடம் மற்றும் கடல்நீர் வாழிடம்

138.   உலகில் உள்ள மிக நீளமான நதி எது?

நைல் நதி

139. நைல் நதியின் நீளம் என்ன?

6650 கிலோமீட்டர்

140.  இந்தியாவின் மிக நீளமான நதி எது ?

கங்கை

141.   கங்கையின் நீளம் என்ன ?

2525 கிலோமீட்டர்

142.  பூமியின் மேற்பரப்பில் எத்தனை சதவீதம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது?

70%

143.  பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையின் எத்தனை சதவீதம் கடல் வாழ்  தாவரங்களில் நடைபெறுகிறது?

40%

144.   நில வாழிடம் எத்தனை வகைப்படும் ?

மூன்று வகை: காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள்

145.  உலகில் எத்தனை சதவீதம் நிலவாழிடங்கள் உள்ளன? 

28%

146.   470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள் என்ன?

மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்

147.   உலகிற்கான ஆக்சிஜன் தேவையில் பாதியை கொடுக்கும் காடுகள் எங்கு உள்ளது?

அமேசான் காடுகள்,தென்னமெரிக்கா

148.  நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள இடத்திற்குப் பெயர் என்ன?

பாலைவனம்

149.  பாலைவனம் பெறும் ஆண்டின் சராசரி மழை அளவு எவ்வளவு குறைவாக இருக்கும் ?

25 சென்டி மீட்டர்

150.   பூமியில் சுமார் எத்தனை சதவீதம் பாலைவனம் உள்ளது?
20%

151.    கள்ளி தாவரங்கள் நீரை தனது எந்த பாகத்தில் சேமித்து வைக்கின்றன?

தண்டு

152.   காடுகள் பெறும் ஆண்டு சராசரி மழையளவு எவ்வளவாக இருக்கும்?

25 முதல் 200 சென்டிமீட்டர் வரை

153.   எப்போது உலக வாழிட நாள் அனுசரிக்கப்படுகிறது ?

அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை

154.  பட்டாணி ,பாகற்காய் போன்ற மெலிந்த தண்டுடைய தாவரங்கள்,ஆதாரத்தை சுற்றிக்கொண்டு வளர்வதற்கு உதவியாக இருப்பவை ?

பற்றுக்கம்பிகள்

155.    இனிப்பு பட்டாணியின் எந்த பாகம் பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளது ?

சிற்றிலைகள்

156.   பாகற்காயின் எந்த பாகம் பற்று கம்பியாக மாற்றமடைந்துள்ளது?

கோணமொட்டு

157.   வளரும் பருவநிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் எது?

மூங்கில்

158.  ரயில் கற்றாழை என அழைக்கப்படும் தாவரம் எது?

அகேவ்

159. அகேவ் தாவரத்தில் எந்தப் பகுதி முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது?

இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள்

160.  சப்பாத்திக்கள்ளியின் எந்த பாகம் முட்களாக மாறியுள்ளது?

இலைகள்

161.   காகிதப்பூ என அழைக்கப்படும் தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?

போகன்வில்லியா

 

 

Tags :

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page