DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
212. உயிரினங்கள் அவை வாழும் இடங்களில் காணப்படும் வகைகள் மற்றும் வேறுபாடுகள் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
பல்லுயிர்த் தன்மை
213. ஜீராங் பறவைகள் பூங்கா எங்கு உள்ளது ?
சிங்கப்பூர்
214. உயிரினங்கள் எந்த மிகச்சிறிய செயல்படும் அலகுகளால் ஆனவை?
செல்
215. நீரில் வாழும் தன்மை கொண்ட எளிய மற்றும் அனைத்து விலங்குகளிலும் முதன்மையானவை எவை?
ஒருசெல் உயிரினங்கள்
216. ஒருசெல் உயிரினங்கள் தங்கள் உடலினுள் உள்ள எந்த சிறப்பு அமைப்புகள் மூலம் அனைத்து உடலியல் செயல்பாடுகளையும் செய்கின்றன?
செல் நுண்ணுறுப்புகள்
217. அமீபா தனது உணவை எதன் மூலம் செரிமானம் அடைய செய்கிறது?
உணவுக்குமிழ்
218. அமீபாவில் எந்த முறையில் உடலின் மேற்பரப்பின் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது?
எளிய பரவல் முறை
219. அமீபா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
நீட்சிகள் அல்லது போலி கால்கள்
220. பாரமீசியம் எங்கு வாழும் ஒரு செல் உயிரினம் ஆகும்?
நீர்
221. பாரமீசியம் எதன்மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
குறுஇழைகள்
222. ஒருசெல் உயிரியான யூக்ளினா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
கசையிழை
223. தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வதற்கு ஏற்ப தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
தகவமைப்புகள்
224. நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவும் மீனின் உறுப்பு எது?
செவுள்கள்
225. எந்த உயிரினங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய இரட்டை வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன?
இருவாழ்விகள்
226. தவளையின் இளம் உயிரி நிலையில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது?
செவுள்கள்
227. தவளையின் முதிர் உயிரி நிலையில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது?
நுரையீரல்
228. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
நுரையீரல்கள்
229. பறவைகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
நுரையீரல்கள்
230.பறவையின் எந்த உறுப்புகள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன?
முன்னங்கால்கள்
231. ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலமும் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும் இதற்கு என்ன பெயர்?
இரு விழிப் பார்வை
232. பருவ மாறுபாட்டின் காரணமாக விலங்குகள் ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?
வலசை போதல்
233. தமிழ்நாட்டில் எந்த இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்றன ?
வேடந்தாங்கல் ,கோடியக்கரை ,கூடன்குளம்
234. ஒட்டகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலைவனக் கப்பல்
235. சில விலங்குகள் குளிரை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன இந்த நிலைக்கு பெயரென்ன?
குளிர்கால உறக்கம்
236. குளிர்கால உறக்கத்திற்கான எடுத்துக் காட்டு விலங்கு எது?
ஆமை
237. சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன இந்த நிலைக்கு என்ன பெயர்?
கோடைகால உறக்கம்
238. கோடைகால உறக்கத்திற்கான எடுத்துக் காட்டு விலங்கு எது?
நத்தை
239. எப்பொழுதும் நீர் அருந்தாத விலங்கு எது ?
கங்காரு எலி
240. தமிழகத்தின் மாநில விலங்கு எது?
நீலகிரி வரையாடுகள்