DOWNLOAD OUR OFFICIAL APP:DOWNLOAD APP | JOIN OUR TNPSC TELEGRAM : JOIN NOW
DOWNLOAD 33,000 ONELINERS [3600+ PAGES] PDF: DOWNLOAD PDF
162. எடை உள்ளதும் இடத்தை அடைத்துக் கொள்வதும் எவ்வாறு அழைக்கப்படும்?
பருப்பொருள்
163. பருப்பொருட்கள் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
மூன்று
164. பருப்பொருட்கள் என்னென்ன நிலைகளில் காணப்படுகிறது?
திண்மம், நீர்மம் மற்றும் வாயு
165. அணுக்களின் அமைப்பை கண்டறிய பயன்படும் கருவிகள் என்னென்ன?
எலக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி மற்றும் ஊடுபுழை நுட்ப எலக்ட்ரான் உருப்பெருக்கி
166. பருப்பொருட்களின் எந்த நிலை என்பது பூமியில் உள்ள பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல?
பிளாஸ்மா நிலை
167. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பிளாஸ்மா நிலை
168. மிகக் குறைவான தட்பவெட்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை என்ன?
போஸ் ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்
169. போஸ் ஐன்ஸ்ட்டீன் சுருக்கம் எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது?
1995
170. இந்தியாவின் எந்த தத்துவ மேதையும் கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரடிஸ்சும் பருப்பொருள் பற்றிய ஒத்த
கருத்துக்களை கூறியுள்ளனர்?
கானடா
171. ஒரு துளி நீரில் எத்தனை நீர் துகள்கள் அடங்கியுள்ளது?
10^21
172. பருப்பொருளின் துகள்களுக்கிடையே என்ன விசை உள்ளது?
ஈர்ப்புவிசை
173. கிடைக்கும் இடத்தை நிரப்ப பரவும் துகள்களின் தன்மை எவ்வாறு அழைக்கப்படும் ?
விரவுதல்
174. வாயுக்கள் நீர்மமாக மாற்றப்படுவதற்கு என்ன பெயர்?
வாயுக்கள் நீர்மமாதல்
175. பருப்பொருளின் எந்த நிலை அழுத்தத்திற்கு உட்படாது?
திண்ம நிலை
176. ஒரே தன்மையான துகள்களால் மட்டுமேயானது எவ்வாறு அழைக்கப்படும்?
தூய பொருள்
177. சிறிய துகள்களால் ஆன அணுக்களால் ஆனது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனிமம்
178. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒரு சேர்மம்
179. தங்கத்தின் தூய்மை எந்த அலகால் குறிப்பிடப்படுகிறது?
காரட்
180. தூய தங்கம் எத்தனை காரட் மதிப்புடையது?
24 காரட்
181. ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான தொடர்களைக் கொண்ட தூய்மையற்ற பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கலவை
182. தனிமங்களின் வேதியல் அடிப்படையிலான சேர்க்கையில் உருவாவது எவ்வாறு அறியப்படுகிறது?
சேர்மம்
183. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஈர ஆடைகளில் இருந்து நீரினை வெளியேற்றும் முறைக்கு என்ன பெயர்?
மையவிலக்கல்
184. மிகச்சிறிய அளவிலான கரையாத திடப் பொருட்களை திரவத்தில் இருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறையின் பெயர் என்ன?
கடைதல்
185. தானியங்களை அவற்றின் தாவர தண்டுகளிலிருந்து பிரிப்பதற்காக விவசாயிகள் தண்டுகளை கடினமான பரப்பில் அடிக்கின்றனர் இந்த முறைக்கு என்ன பெயர்?
கதிரடித்தல்
186. லேசான திடப்பொருள்கள் காற்றினால் அடித்து செல்லப்பட்டு பிரிக்கப்படும் முறைக்கு என்ன பெயர்?
தூற்றுதல்
187. காந்தத் தன்மை உடைய பொருட்களை காந்தத் தன்மையற்ற பொருட்களிலிருந்து பிரிக்கும் முறைக்கு பெயர் என்ன ?
காந்த பிரிப்பு முறை
188. நீரால் லேசான மாசுக்கள் நீரில் மிதந்து எடை அதிகம் உள்ள தானியங்கள் நீரில் மூழ்கி அடியில் தங்கும் இந்த முறைக்கு என்ன பெயர்?
வண்டலாக்குதல்